அலரி மாளிகையில் தீட்டப்பட்ட இராணுவ புரட்சி சதி…!

பிறப்பு : - இறப்பு :

அலரி மாளிகையில் இராணுவ புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது, அதன் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என நன்றாக தெரியும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் இராணுவ புரட்சி ஒன்று விரைவில் ஏற்படும், என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்த கருத்திற்கு பதில் கூறும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி முன்னிலையில் தினேஷ் குனவர்தன தெரிவித்த கருத்தின் காரணமாக எனக்கு அவர் மீது இருந்த மதிப்பு முற்றாக குறைந்து விட்டது.

கடந்த ஜனவரி 8ஆம் திகதி இலங்கையில் இராணுவ புரட்சிக்கு சதி தீட்டினார்கள் அது நன்றாகவே தெரியும். அவர்கள் தான் இப்போது இராணுவ புரட்சி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

உதய கம்மன்பில, கருணாரத்ன ஹன்கவத்த, மொஹான் பீரிஸ், மற்றும் தயா ரத்நாயக்க எனும் இராணுவ தளபதி மற்றும் குருநாகல நகரில் வேட்பாளராக இருந்த முன்னாள் இராணுவ தளபதி ஒருவரும் அன்றைய தினம் அலரி மாளிகையில் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் ஆங்காங்கே இராணுவ புரட்சியினை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியிருந்தார்கள், எமது இராணுவத்தினரும் இராணுவ புரட்சி செய்ய திட்டம் தீட்டியிருந்தார்கள், இப்படியானவர்களே தற்போது நாட்டையும் குழப்ப சதி செய்கின்றார்கள்.

புத்திசாலியான இராணுவீரர்கள் இராணுவ புரட்சி மேற்கொள்ளும் சதிகளில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள், இவை அனைத்துமே நல்லாட்சியை குழப்ப செய்யும் செயல்கள் மட்டுமே எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit