தென் சூடானில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர நட்பு நாடுகள் அழுத்தம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தென் சூடானில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்ப நிலை மற்றும் வன்முறையை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அங்கு சமாதானத்தை ஏற்படுத்தத் தலையிடவோ அல்லது அரசின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கோ நேரிடலாம் என அதன் அண்டை நாடுகளான கென்யா, எதியோப்பியா, சூடான், உகண்டா ஆகிய நாடுகள் உட்பட கிழக்கு ஆப்பிரிக்காவின் 8 நாடுகளின் கூட்டமைப்பான இகாட் (IGAD) எச்சரித்துள்ளது.

தென் சூடானின் அதிபர் சல்வா கீர் முன்னால் பிரதி அதிபரான ரியெக் மாச்சர் இனை ஓர் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த வருடம் நாடுகடத்தத் திட்டமிட்டதில் இருந்து அதிகாரத்தில் நீடிப்பதில் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றார். டிசம்பரில் இவர் மேற்கொண்ட இம்முயற்சி காரணமாக இருவருக்கும் ஆதரவான போராளிகளுக்கிடையே வன்முறை விரைவாகப் பரவி பலர் கொல்லப் படவும் காரணமானது. மேலும் பேச்சுவார்த்தை முயற்சிகளும் தோல்வியடைந்து இக்குழப்பம் தற்போது ஒரு வருடமாக நீடித்து வருகின்றது. இந்நிலையில் தென் சூடானில் சர்ச்சையைக் கிளப்பி வரும் இரு தரப்பும் இணைந்து வன்முறையை உடனே முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் நிபந்தனையற்ற பூரணமான தீர்வை எட்ட IGAD அமைப்பு 15 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

மேலும் இதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் எந்த ஒரு தரப்புக்கும் சொத்துக்களை முடக்கவும் பிரயாணங்களுக்குத் தடை விதிக்கவும் ஆயுதம் கிடைக்காமல் செய்யவும் இன்னமும் குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் தனக்கு உரிமை இருப்பதாகவும் IGAD தெரிவித்துள்ளது. தென் சூடானில் கடந்த ஒரு வருடமாக நீடிக்கும் குழப்பத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இதில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். சில மக்கள் தென் சூடானுக்கு உள்ளேயுள்ள ஐ.நா தளங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளதால் இவையும் போராளிகளின் இலக்குகளாக மாறியுள்ளன. பல தசாப்தங்களாக நீடித்த சண்டையின் பின்னர் சூடானில் இருந்து 2011 இல் பிரிந்த தென் சூடான் உலகில் மிக அண்மையில் உதயமான நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*