நடிகர்கள் எல்லோரும் நாய்கள்..!!-கேவலமாக திட்டிய ராதாரவி..!!

பிறப்பு : - இறப்பு :

சமீபத்தில்தான் இயக்குநர் லிங்குசாமியை அவமானப்படுத்துவதை போல பேசி பெரும் சர்ச்சையை உண்டாக்கினார் ராதாரவி. அவர் பேசிய பேச்சால் செம்ம கடுப்பில் இருந்தார் லிங்குசாமி. தற்போது அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் ராதாரவி. இதனால் அவர் மீது எல்லா நடிகர்களும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அப்படி என்ன அவர் பேசினார்.. செய்தியை படிங்கள் தெரியும்.
அதாவது நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நடிகர் ராதாரவியும் துணைத் தலைவர் காளையும் தங்கள் சங்க உறுப்பினர்களையே மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியிருப்பதுதான் நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் நலிந்து போன நாடகக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா திருச்சியில் நடைபெற்றது.

 

அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ராதாரவி பேசியதாவது: ”இந்த நாசர் இருக்கான்ல, அவனை ஒரு தடவை ”போடா மயிறு…”ன்னு சொன்னேன். ஆமாம், அப்படித்தான் அவனைச் சொன்னேன். என்னங்க அவரைப்போய் இப்படிச் சொல்றீங்கன்னு கேட்டாங்க. ஆமாம், அவன் வெளியூர்ல உள்ள நாடகக் கலைஞர்களை எல்லாம் சேர்க்கக் கூடாதுன்னு சொன்னான். அதான் ”மயிறு”ன்னு சொன்னேன். என்று ராதாரவி சொல்லிச் சிரிக்க அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களும் சந்தோஷமாக கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

 

அடுத்து ரஜினியைப் பற்றிச் சொன்னார். 14 வருஷம் கழிச்சி நடிக்கிறீங்களே..ன்னு ரஜினி கேட்டார். ஆமாம், சார்ன்னு சொன்னேன். ஏன் எங்கிட்ட முதல்லயே சொல்லிருக்கலாமே..ன்னு சொன்னார். ”என்ன சார் பண்றது எங்க அப்பன் உங்க படத்துல நடிக்கிறதுக்கா பெத்தான், அது கிடையாது”ன்னு சொன்னேன். உங்கிட்ட வாயைக் குடுத்துட்டு தப்பிக்க முடியாதுன்னு சொன்னார். இதை ஏன் சொல்றேம்னா நம்மைப் பத்தி யார் நல்லா பேசினாலும், தப்பா பேசினாலும் விட்டுக் கொடுக்கவே கூடாது என்றார்.

 

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சங்க துணைத் தலைவர் காளையோ நடிகர்களை திட்டுவதில் ராதாரவியையே மிஞ்சி விட்டார். அவர் பேசும்போது “ நடிகர் சங்க இடத்தில் ஒரு கட்டடத்தை நிறுவி, அதில் ஒரு தியேட்டரை வைத்து அதன் மூலமாக நடிகர் சங்கத்துக்கு மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 70 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வேண்டிய பணத்தை ‘பூச்சி’ என்கிற ஒரு ‘விஷப்பூச்சி’ அதை கோர்ட்டில் தடை வாங்கி தடுத்து வைத்திருக்கிறது.
அது மட்டும் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் நாடகக் கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித் தொகைகள் எல்லாவற்றையும் அதிகமாக்கி நல்ல முறையில் கொடுத்திருக்கலாம். அதற்காகத்தான் இந்த திட்டத்தை சரத்குமார் போட்டார்.
அதைக் கெடுத்து விட்டார்கள். போட்டி, பொறாமை தான் இதற்கெல்லாம் காரணம். வேற ஒன்றுமே இல்லை. இவனெல்லாம் யாரு, நாடகத்துக்கும் இவனுக்கும் சம்பந்தமே கிடையாது. எப்படியோ அவன் கெட்டிக்கிட்ட புண்ணியம். இங்க வந்து நிக்கிறான்.

 
”ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுது”ங்கிற கதையா ஒண்ட வந்த அவன் நம்மளை விரட்ட கனவு கண்டுக்கிட்டிருக்கான். அதுக்கு நாடகக் கலைஞர்கள் யாரும் இடம் கொடுக்கக் கூடாது. அவங்க ( நடிகர்கள் ) எல்லாரையும் நாடகக் கலைஞர்களை ஓட ஓட விரட்ட வேண்டும்.
முதலமைச்சர் அம்மா ( ஜெயலலிதா ) க்கே யாருமே ஜாமீன் கிடைக்காது, கிடைக்காதுன்னு சொன்னாங்க, ஆனா கிடைச்சது. அந்த மாதிரி நடிகர் சங்கத்துல தியேட்டர் கட்டுறதுக்கும் சீக்கிரத்திலேயே அனுமதி கிடைக்கும். அடுத்த வருஷம் ஜூலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நிச்சயமாக நடக்கும்.
அதுல சலம்பல் பண்ற இந்த நாய்களை ( நடிகர்கள் ) ஓட ஓட விரட்டணும். தேர்தல் வெச்சாத்தான் அவங்களை விரட்ட முடியும் என்று பேசியிருக்கிறார்.
இவர்களின் இந்த கேவலமான பேச்சைக் கேள்விப்பட்டதும் சூடான நடிகர் விஷால் இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இன்னும் சில நடிகர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். பத்திக்க ஆரம்பிச்சிடுச்சு, இனிமே நடக்கிறதெல்லாம் வேடிக்கை தான்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit