ஓ தமிழீழமே… (VIdeo)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

abinaya

தமிழீழமே மாவீரர் ஈகம்
கனவாய் உன்னை சுமந்ததாலே
கண் விழியை இவர்கள் மூடவில்லை
கண் விழிக்குள் இவர் சுமந்தார்
ஆயிரம் வீர உணர்வுதனை

மொழி வாழ ஒருவழி கூடி வந்தார்
புலி வரியோடு உடல்சேர்த்து
உயர்வு கொண்டார்
கல்லும் முள்ளும் கடந்து வந்து
களங்களை வென்று காதல் செய்தார்

பறை முரசோடு பேசிய உங்கள் மொழி
தமிழீழ மண்ணுக்காய் வீழ்ந்த உடல்
விடுதலை பேச்சான உங்கள் மூச்சு
தொடக்கி வைத்த சுதந்திர பயணம்
முடிவிலி இன்றியே தொடருது தினம்

இனமானம் காக்க இவர் போனதிசையில்
இனியாவும் உயர்வே சிகரமாய் நிமிரும்
இவர் காத்த தமிழை இவர் சந்ததி காக்க
கார்த்திகையே கசிந்திடுவாய்…..

– அபினயா –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit