யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை : பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

jaffna-boys-death

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற பதில் நீதவான் இளங்கோவன் இன்று உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வி கமராக்களின் பதிவுகளை கொழும்பு பல்கலைக்கழக தகவல் பீடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பொலிஸாரின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்தார்.

சம்பவத்தில் பலியாகிய மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு தினங்களை ஒதுக்கித்தருமாறு நீதிமன்றிடம் CID யினர் கோரிக்கையினை முன்வைத்தார்கள்.

இதன்படி எதிர்வரும் 20ஆம், 29ஆம் திகதிகளில் இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளலாம் என யாழ்.நீதிமன்ற பதில் நீதவான் இளங்கோவன் அறிவித்தார்.

மேலும் இதன்போது மாணவர்கள் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி சிவலிங்கம், குருபரன், வடமாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான சயந்தன் உட்பட ஆறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit