இனி மக்கள் வங்கிகளுக்கு அலைய வேண்டாம்! புதிய அதிரடி அறிவிப்பு

பிறப்பு : - இறப்பு :

இன்று முதல் பெட்ரோல் பங்குகளிலும் 2000 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 8 ஆம் திகதி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். அதைத் தொடர்ந்து புதிய ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு வந்தது.

இதன் காரணமாக கையில் பணம் இல்லாமல் தவித்த பொதுமக்கள் அனைவரும் தினந்தோறும் நீண்ட வரிசையில் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் காத்துக் கிடந்து பணத்தை பெற்றுச் செல்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் பலருக்கும் நேரம் வீணாக்கப்படுவதுடன், அவர்களின் அன்றாட வேலையும் பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்குளில் POS Machines மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தங்களிடம் உள்ள டெபிட் கார்டுகளை தேய்த்து, ரூ.2000 வரை பணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதி முதலில் ஸ்டேட் வங்கியின் POS கருவிகள் மூலம் ரூபாய் 2,500 வரை பெட்ரோல் பங்குகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

அதைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களில் HDFC Bank, CitiBank, ICICI Bank ஆகிய வங்கிகளின் POS Machines மூலம் ரூபாய் 20,000 வரை பெற்றுக் கொள்ளும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit