திருச்சி அருகே 8பேரை கொன்று நிர்வாணமாக புதைத்த சப்பாணி!

பிறப்பு : - இறப்பு :

திருச்சி அருகே 8 பேரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சப்பாணி மனநோயாளி என சிறைத்துறை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை என்பவரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த சப்பாணி என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் சப்பாணியிடம் மேற்கொண்ட விசாரணையில் தான் 8 பேரை கொலை செய்து நிர்வாணமாக புதைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.

மேலும், தங்க நகைகளுக்காகவே இந்த 8 கொலைகளை செய்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சப்பாணி சார்பில் வழக்கறிஞர் பொன்முருகேசன் திருச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அதில், தனிமை சிறையில் அடைத்து பொலிசார் தன்னை துன்புறுத்துவதாக சப்பாணி குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதி ஷகிலா முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறைத்துறை அதிகாரிகள், சப்பாணி மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை முழு பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பரிசோதனை செய்வதற்கான வசதி சிறையில் இல்லை என்பதால் திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

இதை கேட்டறிந்த நீதிபதி, வழக்கை வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit