
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கைப் பணிப் பெண் ஒருவர் நேற்று (16) நாடு திரும்பியுள்ளார்.
கலேவெலயைச் சேர்ந்த மாணிக்கம் ராணி என்ற 29 வயதான பெண்ணே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.
9 மாதக் குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி இந்த பணிப்பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 9 மாதக் குழந்தை உயிரிழந்தது.
இதனை அடுத்து அவருக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனையுடன், மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
எனினும் மேன்முறையீட்டை அடுத்து அவருக்கான தண்டனை ஒன்றரையாண்டு சிறைவாசமாக குறைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார்.