அப்பாவிகளான எமது பிள்ளைகளை விடுவியுங்கள்….!கதறியழுத தாய்மார்

பிறப்பு : - இறப்பு :

அப்பாவிகளான தமது பிள்ளைகளை ‘ஆவா’ குழுவினர் என பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்துள்ளதாக, யாழில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட 11 இளைஞர்களின் தாய்மார் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் அண்மையில் யாழில் கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் இன்று மீள நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோது, நீதிமன்ற வளாகத்தில் கதறியழுத அவர்களது தாய்மார் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்திலும் தம் மீதான அடக்குமுறைகள் தொடர்வதாக தெரிவித்த குறித்த தாய்மார், உண்மையில் ஆவா குழுவின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத்தினருமே செயற்படுவதாக அமைச்சர் ராஜித பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார். எனினும், பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் யாழ். இளைஞர்களே கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மூவர் தொடர்பில் குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், அவர்களது உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit