ஜெய்ஹிந்த் 2 திரைவிமர்சனம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

சென்னையில் சிறுவர்களை வைத்து கராத்தே பள்ளி நடத்தி வருகிறார் அர்ஜூன். இவரது கராத்தே பள்ளியில் படிக்கும் மாணவனின் சகோதரியுடன் அர்ஜூனை சந்திக்க வருகிறார் நாயகி சுர்வீன் சாவ்லா. இவர் அர்ஜூனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒருநாள் சுர்வீன் சாவ்லா தான் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் மாடியில் துணிகளை காயவைக்கும் போது மேலிருந்து கீழே விழும் நிலையில் இருக்கிறார். அப்போது அந்த வழியாக வரும் அர்ஜூன் இவரை பார்த்ததும் வீட்டிற்குச் சென்று காப்பாற்றுகிறார்.

இதை பார்க்கும் சுர்வின் சாவ்லாவின் அப்பாவான மனோபாலாவும் அவரது மனைவியும், இவர்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் சம்மதத்துடன் அர்ஜூனை காதலில் விழவைக்கிறார் சுர்வின் சாவ்லா.

இவர்கள் வசிக்கும் பகுதியில் ஏழ்மையான குடும்பதைச் சேர்ந்தவர் தனது குழந்தையை நல்ல பள்ளியில் படிக்க வைக்க முயற்சி செய்கிறார். அந்தக் குழந்தையுடன் அர்ஜூன் மற்றும் சுர்வின் இருவரும் நன்றாக பேசி பழகுகிறார்கள். அந்தக் குழந்தை பெரிய பள்ளியில் இடம் கிடைத்தும் அதிக பணத்தை செலுத்த முடியாத காரணத்தால் பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறாள். இதனால் மனவேதனை அடையும் அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையை கொன்று விட்டு அவர்களும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதைக் கண்டு வேதனை அடையும் அர்ஜூன் நமது நாட்டின் கல்வி நிலைமையையும் ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்காமல் இருப்பதையும் மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். மக்கள் அனைவருக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும் எனபதற்காக முயற்சி எடுக்கிறார்.

அதில் முதல் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் முன்னால் பேட்டியளிக்கிறார். இதை மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளி உரிமையாளர்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அர்ஜூனை அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

இதிலிருந்து அர்ஜூன் தப்பித்தாரா? நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வழி செய்தாரா? என்பதே மீதிக்கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெய்ஹிந்த் 2-ம் பாகத்தை எடுத்திருக்கும் அர்ஜூன், முதல் பாகத்தில் இருந்த அர்ஜூன் போல் இன்றும் சுறுசுறுப்புடனும் இளமையுடனும் இருக்கிறார். தேசப்பற்று என்பது நாட்டுக்கு வெளியே ஆயுதம் ஏந்தி போராடுவது மட்டுமல்லாமல் நாட்டுக்குள் வாழ்பவர்களுக்கு கிடைக்க கூடிய கல்வி மற்றும் பிற பொது நலன்கள் கிடைக்க போராடுவதும் தேசப்பற்றுதான் என்பதை இப்படத்தின் மூலம் காண்பித்திருக்கிறார். நாட்டிற்கு தேவையான முக்கியமான கருத்தை அழுத்தமாக சொல்லவந்த அர்ஜூனின் முயற்சி வரவேற்கக் கூடியது. ஆக்‌ஷன் காட்சிகளில் அர்ஜூனின் ஆக்‌ஷன் சற்றும் குறையாமல் மிரட்டியிருக்கிறார். முற்பாதியில் ஒரு சில காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகின்றன.

நாயகி சுர்வின் சாவ்லா பார்க்க அழகாக இருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மயில்சாமி மற்றும் பிரமானந்தத்தின் காமெடி எடுபடவில்லை.

அர்ஜுன்ஜெனியாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். வேணுகோபாலின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit