தனியார் காணிக்குள் அத்துமீறிய விகாராதி…!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள், இன்று (16) காலை வந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

இதன்போது, சிங்கள மக்கள் வாகனங்களில் இருந்து வருதை தந்ததையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த பிரதேச தமிழ் மக்கள் வருகை தந்ததையடுத்து நிலமையை கட்டுப்படுத்த பல நடவடிக்கை மேற்கொண்டபோதும், பலனளிக்க வில்லை.

குறித்த தனியார் கணிக்குள் விகாராதிபதி அத்துமீறி நுளைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நிலமையை பொலிஸாருக்கு தெளிவுபடுத்தியதும் உடனடியாக காணியில் இருந்து வெளியேறுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விகாராதிபதியின் செயல் இன முறுகலையும் இனத் துவேசத்தையும் ஏற்படுத்தக்கூடிய விடயமாக உள்ளது என காணியின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற சட்டத்தையும் மீறி பிக்கு அத்து மீறி நுளைந்துள்ளார், நீதிமன்ற கட்டளையை கையில் வைத்துக் கொண்டு பொலிஸாரும் உரிய நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளவில்லை என பல அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன். விகாராதிபதி தொல்பொருள் திணைக்களம் இதற்கான முடிவை நிச்சயம் பெற்றுத்தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*