யாழில் பதற்றம்: கலகம் தடுக்கும் பொலிஸார் குவிப்பு.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

jaffna-police

யாழில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு, யாழ்.மாநகர சுகாதார ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையால் பிரதேசத்தில் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பிரதேசத்தில் பொலிஸாருடன் கலகம் தடுக்கும் பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிரந்தர நியமனம் குறித்து சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக யாழில் பெருமளவு குப்பைகள் தேங்கியுள்ளதோடு, இதனால் சூழல் மாசடைந்துள்ளது. இந்நிலையில், யாழிலுள்ள தனியார் மாவட்ட அலுவலகமும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகமும் இணைந்து குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன.

இவ்வாறு, யாழ்.கொட்டடி பகுதியிலுள்ள குப்பைக்கூழத்தில் குப்பைகளை அகற்ற முற்பட்ட வேளையிலேயே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, அழுகிய நிலையில் காணப்பட்ட நில மிருகங்களின் உடலங்களை இழுத்துவந்து வீதியில் இட்ட சுகாதார ஊழியர்கள், அருகில் செல்வதற்கே முடியாத நிலையில் காணப்படும் இவ்வாறான உடலங்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் தமக்கு, நிரந்தர நியமனம் வழங்குவதற்கு இழுத்தடிப்பு செய்யப்படுவது வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit