தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு போர் பயிற்சி…! வெளிவரும் அதிர்ச்சி தகவல்.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

army-trainng

1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஜூலை கலவரத்தின் பின்னர் தமிழ் நாட்டுக்கு சென்ற உடனேயே ஈழத் தமிழர்களுக்கு போர் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய அமைதிப் படையின் விமானப் படைக்கு பொறுப்பாக இருந்த எயார் மார்ஷல் பாரத் குமார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ரோல் ஒஃப் எயார் பவர் வித் ஐ.பி.கே.எஃப் (Operation Pawan: Role of Airpower with IPKF) என்ற தனது புதிய நூலில் இந்த விடயத்தினை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த போர் பயிற்சியானது தமிழ் நாட்டு அரசாங்கம் அறிந்தே மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 1984ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளுக்கு இந்திய புலனாய்வுப் பிரிவு போர் பயிற்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் நாட்டு அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி வழங்குவதை பார்க்கிலும், இந்திய மத்திய அரசாங்கம் பயிற்சி வழங்குவது உசிதமானது என கருதப்பட்டதாகவும் அவர் தமது நூலில் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit