சிங்கள பௌத்த பேரினவாத ஆழ்மனதின் ஆழத்தை வெளிப்படுத்திய சுமனரத்ன தேரரின் இனவெறிப்பேச்சு! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! (காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிரட்டிப் பேசியுள்ளமை சிங்கள பௌத்த பேரினவாத ஆழ்மனதின் ஆழத்தை வெளிப்படுத்தும் இனவெறிப்பேச்சாகும். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமமாக அமைந்துள்ள மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதியில், மங்களராமய விகாரைக்கு அண்மித்துள்ள சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள். இது குறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமை சுமனரத்ன தேரரின் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

சட்டத்திற்குட்பட்டு முறையான அனுமதியுடன் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட நிலத்தில் கால்நடைகளை மேய்சலுக்கு விட்டு பயனடைபவர்கள் தமிழர்கள் என்பதனை பொறுத்துக்கொள்ள முடியாத இனவாத மனோன்நிலையின் வெளிப்பாடாகவே இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

சமூகத்தில் மதிப்பு மரியாதையுடன் பணியாற்றிவரும் தமிழ் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கானவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க சுமனரத்ன தேரர் பிரயோகித்த வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமானவையாகவும் அருவருக்கத்தக்கதாகவும் உள்ளது.
இந்த சம்பவத்தை தனிப்பட்ட ஒரு விடயமாக எடுத்துவிட முடியாது. தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாத மனோன்நிலையின் வெளிப்பாடாகவே சுமனரத்ன தேரரின் இச்செயற்பாடு அமைந்துள்ளது.

“அரச காணி அத்துமீறலை தடுக்க நீ யார்…? உன்னுடைய அப்பன் வீட்டுக்காணியா…? அம்மா வீட்டுக்காணியா…? ஏன் சிங்கள மக்களுக்கு வழக்கு வைத்தாய்…? நீ யார் இவற்றையெல்லாம் செய்ய…? புலியா…? தமிழர்கள் எல்லாம் புலி… கடந்த காலங்களில் புலியாக நீங்கள் ஆயுதம் ஏந்தி சிங்களவர்களை கொன்றீர்கள், புலித் தமிழர்களா.. உங்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்கின்றேன் இனியும் சிங்களவர்கள் மீது கை வைக்க நினைக்க வேண்டாம். மீறி கைவைத்தீர்கள் ஆயின் என்ன நடக்கும் என்பது தெரியாது, உங்களைப்பார்க்கும் போது உடம்பெல்லாம் பற்றி எரிகின்றது. ஒரு சிங்களவர் மீதாவது அதிகாரம் செய்ய நினைத்தால் தமிழர்களின் அதிகாரங்கள் இனி நிலைக்காது……… என்று அவேசமாக படு கெட்டவார்த்தைகளில் பேசிய சுமனரத்ன தேரர் நீ தமிழ் நாய்… உன்னைக் கொல்லுவன்…” என கிராம சேவகரான தமிழரைப் பார்த்து கொலைவெறியுடன் கத்தியமை சிங்கள பௌத்த பேரினவாத ஆழ்மனதின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்ட குரோதமாகும்.

இந்த சம்பவம் இரண்டு விடயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

தமிழர்கள் என்றும் சிங்களர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்ற பௌத்த சிங்கள பேரினவாத மனநிலையில் மாற்றமேதும் நிகழவில்லை என்பதுடன் ஒருபோதும் ஒன்றாக வாழ்வதென்பது சாத்தியமில்லை என்பதனையும் கொலைவெறியுடன் நிரூபித்துள்ளது இச்சம்பவம்.

கொலைவெறியுடன் பேசிய பௌத்த பிக்குவின் அராஜகத்தை தடுத்துநிறுத்தி அரச உத்தியோகத்தர்களது மாண்பினை பாதுகாக்க வேண்டிய காவல்துறை உயரதிகாரி பெயரளவிலான தலையீட்டினை வெளிப்படுத்தியதுடன் வேடிக்கை பார்த்திருந்தமை சிறிலங்கா காவல்துறையும் தமிழர்களுக்கு விரோதமாகவும் சிங்களர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதனை மீண்டும் உணர்த்தியுள்ளது.

எதுவித அச்சுறுத்தல் முனைப்புமின்றி அதற்கான புறச்சூழமைவும் அற்றிருந்த தருணத்தில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உயிர்ப்பலியெடுத்த அதே சிறிலங்கா காவல்துறைக் கட்டமைப்புதான் இங்கு பௌத்த பிக்குவின் கொலைவெறி தாண்டவத்தினை வேடிக்கை பார்த்து நின்றது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர் விரோத சித்தாந்தத்தின் அடியொற்றி தமிழினப் படுகொலையை முன்னெடுத்துவரும் அங்கமாக சிறிலங்கா காவல்துறை கட்டமைப்பும் செயல்பட்டு வருகின்றமை இன்றளவும் தொடர்கின்றதன் சாட்சியாகவே இச்சம்பவங்கள் அமைந்துள்ளன.
பௌத்த பிக்குவின் இனவெறிப் பேச்சினையும் சிறிலங்கா காவல்துறையின் பாரபட்சமான போக்கினையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறான இனவெறி செயற்பாடுகளே நாட்டை பேரழிவுக்கு இட்டுச்சென்றன என்ற வரலாற்றுப் பாடத்தை மறந்து தொடர்ந்தும் இதே பாதையில் பயணித்தால் அதுவே சுதந்திர தமிழீழத்திற்கான திறவுகோளாக அமையும் என்பதனை உறுதிபட உரைக்கின்றோம்.

சிறிலங்கா முழுவதும் பௌத்த சிங்களர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்து வரும் பௌத்த பீடங்கள் இன்னும் தமிழர்களின் உயிர் குடித்து உரிமைகளைப் பறிக்கும் பலிபீடங்களாகவே தகித்துக்கொண்டிருக்கின்றன என்பதன் அண்மித்த சாட்சியாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

சிங்களர்களது மரபணுவில் பதியமாகிவிட்ட இனவெறியானது என்றும் மாறப்போவதில்லை. அன்பான உலகத் தமிழ் மக்களே எமது ஒன்றுபட்ட பலத்தின் மூலமே எமது இனத்தின் இருப்பை உறிதிசெய்ய முடியும்.

தமிழர் கைகள் பலமாகும் போதே சிங்களர் கொட்டம் அடங்கும். சிங்களர் கொட்டமடக்கி தமிழ்க் குடி காக்க, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழிகாட்டுதலில் தாயக விடுதலைக்காய் தம்முயிர் துறந்த மாவீரர்கள் வழித்தடத்தில் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்ட மாபெரும் சக்தியாக தடம்பதித்து தமிழீழ விடியலுக்காய் அணியமாவோம் வாரீர்!

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*