விசாரணைக்கு சென்ற போது அதிகாரிகளை கடுமையாக திட்டிய மகிந்த மனைவி!

பிறப்பு : - இறப்பு :

நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு விசாரணைக்காகச் சென்றிருந்த போது, நான் குறித்தஅதிகாரிகளை கடுமையாக திட்டிவிட்டு வீடு திரும்பினேன் என முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எந்த தவறையும் செய்யாத பட்சத்தில் தன்னை விசாரணைக்காக அழைத்திருந்தார்கள்.

எனவே, தனது கணக்காளர் மூலம் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு சென்றதாகசிரந்தி குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளியாக இல்லாத பட்சத்தில் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டியஅவசியம் இல்லை, எனவே நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகளை திட்டியதாகமகிந்தவின் மனைவி தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞராகிய தனது மகன் நாமல் மற்றும் சிரேஸ்ட வழக்கறிஞர்கள் இருவருடன்சென்றதாகவும், தான் ஏதாவது தவறு செய்திருந்தால் அவர்கள் ஆவணங்களை சோதனையிடும்போது இருந்திருக்கும் அப்படி என்றால் நான்எனது தவறுகளை ஒப்புக் கொண்டிருப்பேன் என சிரந்தி கூறியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சிரந்தி ராஜபக்ச மேற்கண்டவாறுகுறிப்பிட்டுள்ளார். .

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit