சுவிற்சர்லாந்து தலைநகரில் சைவநெறிக்கூடம் இணைந்து நடாத்திய பல்சமயங்களின் இரவு நிகழ்வு.(படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பண்பாடுகளிடையில் பேச்சுவார்தை எனும் தலைப்பில் (DIALOG DER KULTUREN) இம்முறை பல்சமயங்களின் இரவு நிகழ்வு 12. 11. 2016 நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தெருவுந்து நிறுத்தத்தில் (Burgernziel, Tramdepot, Thunstrasse 106 ➞ Linien 7/8 bis )18.15 மணிமுதல் தொடங்கப்பெற்றது.

எட்டுச் சமயத்தைச் சேர்ந்த சமயங்களின் இரவு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் நிகழ்வினை ஆரம்பிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்தனர். சைவசமயத்தின் சார்பில் சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. குழந்தை விக்னேஸ்வரன் அவர்கள்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

எனும் சங்கப்புலவர் புலவர் பூங்குன்றனார் கவியினைப் மேடையில் பாடி நிகழ்வின் வரவேற்பினை சைவநெறிக்கூத்தால் ஆற்றினார். பழந்தமிழ்ப்பா மேடையில் டொச்மொழியில் உடன் மொழிபெயர்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள வெளிநாட்டவர்கள் இந்நிகழ்வைக்காணக் கூடியிருந்தனர்.

பேர்ன் போக்குவரத்துக் கழகமான பேர்ன்மொபில் நிகழ்வின் இணைபங்களராக இருந்தது. அதன் அடிப்படையில் எண்சமயத்தவர்களும் தங்கள் வரவேற்பினை ஆற்றியத்தைத் தொடர்ந்து பேர்ன் பொதுப் போக்குவரத்து அறிவிப்புகளைச் செய்யும் அம்மையார் ஒலியில் நிகழ்வுகள் தொகுத்தளிக்கப்பட்டது.

அடுத்ததாக பேர்ன் நகரில் திறாம்வண்டி ஓட்டுனராகப் பணிபுரிம் சைவசமயத்தை ஒழுகும் ஈழத்தமிழரான திருநிறை. பாலா அவர்களும் பாசெல் நகரில் திறாம் வண்டி ஓட்டுனாராகப் பணிபுரியும் சென்சமயத்தினை வாழும் சுவிஸ்நாட்டவர்கள் இருவரும் மேடையில் தோன்றி வாழ்வில் கடமையினையும் தொழிலையும் வேறுபண்பாட்டை வாழ்வியல் முறையினை ஒழுகி வாழ்வது தொடர்பான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

swizerland-1

தொகுப்பாளர் இருவரிடமும் பல் வினாக்களை சமயம், இனம், மொழி தொடர்பாக கேட்டிருந்தார். திரு. பாலா அவர்களிடம் நீங்கள் ஒருமுறை பேர்ன் பாராளுமன்றம் ஒரு பெரிய கோவில் என்று கூறியிருந்தீர்கள் அதற்கு இப்போது விளக்கமளிக்க முடியுமா என வினாவினார். அவர் அதற்குப் பதில் அளிக்கையில் இறைவன் என்பவன் அன்பானவன், மக்கள் மீது காட்டப்படும் அன்பு இறைவனாகும். சுவிஸ் பாராளுமன்றத்தில் இருப்போர் அந்தவகையில் பல உயிர்கள்மீது அன்பும் பரிவும்கொண்டு புகலிடம் வழங்கி இருக்கிறார்கள். ஆகவே நான் சுவிஸ் பாராளுமன்றத்தின் கட்டிடத்தை பெரிய கோவிலாகவே நோக்குகிறேன் என்றார். கூடியிருந்த சுவிஸ்நாட்டவர்கள் பெரும்கரவொலி எழுப்பி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

swizerland-2

இப்பண்பாட்டு நிகழ்வின் பங்காளராக சைவநெறிக்கூடம் – அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் விளங்குகின்றது. இம்முறை இளந்தமிழ்ச் செல்வங்களின் நடனம் அலெவித்தென் சமயத்தவர்களது தர்க்காவில் இரவு 20.30 மணிமுதல் நடைபெற்றது. இரவு 21.30 மணிமுதல் குர்திஸ் இனத்தவர்கள் நடனம் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் பெற்றது.

swizerland-3

19.00 மணிமுதல் இரவு 22.30 மணிவரை பல்சமய இல்லத்தில் 8 சமயத்தவர்களும் பல் நிகழ்வுகள் ஆற்றினர்.

திருமதி. ராஜ்கண்ணா சிவாஜினி அவர்களின் நெறியாள்கையில் இளந்தமிச் செல்வங்களின் பரதக்கலை நிகழ்வு நடைபெற்றது.

வேறும் பல இளந்தமிழ்ச் செல்வங்களின் தனி நடனமும் குழு நடனமும் தமிழிசையில் நடைபெற்றிருந்தது.

ஈழத்தில் இருந்து ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலிற்கு வருகையளித்திருக்கும் திருநிறை. மதுசூதனன் குழுவினர் அவர்களின் மங்கள இசை மீட்டப்பட்டது மேலும் பல்சமய இரவு நிகழ்சிக்கு பெரும் சிறப்பினை அளித்தது.

சமயங்களின் இரவு நிகழ்வு 12. 11. 2016 சனிக்கிழமை கீழ்காணும் இடங்கிலும் சமயப் பண்பாட்டு இணக்கப்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

Ostring ➞ Kirche Bruder Klaus
Brunnadernstrasse ➞ Altes Tramdepot Burgernziel ➞ Kirchgemeindehaus Petrus
Luisenstrasse ➞ Bahà‘ì Zentrum
Rathaus ➞ Kirche St. Peter und Paul
Zytglogge ➞ Kirche St. Peter und Paul
Bärenplatz ➞ Waisenhausplatz
Bern Bahnhof ➞ Heiliggeistkirche
Loryplatz ➞ Friedenskirche
Steigerhubel ➞ Kulturzentrum Ahl al Bayt
Europaplatz ➞ Haus der Religionen
Bümpliz Post ➞ Reformierte Kirche Bümpliz

பலநூற்றுக்கணக்கான சுவிற்சர்லாந்து நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகை அளித்து செந்தமிழ் திருமறை வழிபாட்டினையும், திருக்கோவில் அழகையும் கண்டு சென்றனர். பலரும் சைவசமயம், ஈழத்தமிழர் பண்பாடு, வாழ்வியல் தொடர்பாக கேட்டறிந்தனர். குழுவாகவும், தனித்தனியாகவும் எமது சமயம், இனம், மொழி, பண்பாடு, வரலாறு ஆகிய விளக்கங்கள் ஆர்வமுள்ள வேற்று நாட்டவர்களுக்கு இளவயதுத் தமிழ்ப்பிள்ளைகளால் எடுத்துரைக்கப்பட்டது.

தமிப்பண்பாட்டுப் பாரம்பரிய உணவு சமைத்து விருந்தும் வழங்கப்பட்டது.

பண்பாட்டு சயம இணக்கப்பாட்டின் இரவாக இந்தநாள் யாவர் உள்ளத்திலும் நிறைந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*