ஆண் சாரதி இரண்டு மாத கர்ப்பம்??

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

எகிப்தில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க பேரூந்து சாரதிகளிற்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எகிப்தில் அரசாங்க வைத்தியசாலைகளில் பரிசோதனைக்காக பேருந்து சாரதிகளை தமது சிறுநீரினை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பேரூந்து சாரதிகள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கினர். ஆனால் ஒருவர் மட்டும் தான் போதை பழக்கத்தை மறைக்க தனது மனைவியின் சிறுநீரை மாற்றி கொடுத்து விட்டார்.

இவரது கெட்ட நேரமோ அல்லது துரதிர்ஷ்டமோ தெரியவில்லை. அந்த பேருந்து சாரதியின் மனைவி 2 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். எனவே, அந்த சிறுநீர் பரிசோதனையில் பேரூந்து சாரதி கர்ப்பம் என தெரிய வந்தது.

அதன்படி, பேரூந்து சாரதி கர்ப்பமாக இருப்பதாக அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டது. இதில் என்ன விசேஷம் என்றால் இந்த சிறுநீர் உங்களுடையது தானா என அதிகாரிகள் கேட்க பிரச்சினையில் இருந்து தப்பிக்க அந்த டிரைவர் ஆமாம் என்று தலையாட்டியுள்ளார்.

உடனே, அந்த அதிகாரி மழுப்பலுடன் கூடிய கிண்டல் சிரிப்புடன் ‘நீங்கள் கர்ப்பம் அடைந்திருப்பதற்கு எனது வாழ்த்துக்கள்’ என கூறி கை குலுக்கி அனுப்பி வைத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit