தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசில் இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் மற்றும் மேலும் சில நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க தமிழர் ஆதரவு மையத்துடன் பல சந்திப்புகள் நடைபெற்றுள்ளது.

அத்தோடு தென் ஆப்பிரிக்கா கொமினிஸ்ட் கட்சியுடன் , அதன் இளையோர் அணியுடனும் சந்திப்புகள் நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பில் 400 பக்கங்களுக்கும் மேலான தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் மற்றும் இன்றும் ஈழத்தமிழர் எதிர்கொள்ளும் கட்டமைப்புசார் இனவழிப்பை( ராணுவமயமாக்கல் , தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, திட்டமிட்ட தமிழர் கலாச்சார சீரழிவு , ஊடக சுதந்திரம் , தமிழர் நில அபகரிப்பு ,வடமாகாண தமிழ் இனவழிப்பு தீர்மானம், யேர்மனியில் நடைபெற்ற பிரேமன் மக்கள் தீர்ப்பாயம் ,பௌத்தமயமாக்கல்,போர்க்கைதிகள் விடையம், காணாமல் போகச்செய்தல், இன்றைய தாயக நிலைமை ,இன்றைய ” நல்லாட்சி ” அரசாங்கத்தின் செயல்கள் )
சாட்சிப்படுத்தும் ஆவணங்களின் தொகுப்பும் கையளிக்கப்பட்டுள்ளது.

2017 ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு பல நாடுகளை நோக்கிய அரசியல் செயற்பாடுகள் வேகப்படுத்தப்படும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது.அத்தோடு எதிர்வரும் நாட்களிலும் தாயகத்திலும் தமிழின அழிப்பை ஆய்வுரீதியாக சாட்சியுடன் எடுத்துரைக்கும் முயற்சிகளுக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தனது ஆதரவை வழங்கியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*