புலிகளுடனான இறுதிப் போரில், போர்க்குற்றம் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஓய்வு

பிறப்பு : - இறப்பு :

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போது போர்க்குற்றம் இழைத்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நேற்று முன்தினம்(10) முதல் ஓய்வு பெற்றுள்ளார்.

இறுதிக்கட்ட போரில் மணலாற்றில் இருந்து முல்லைத்தீவுக்கு நகர்ந்த இலங்கை இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர் மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த.

புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போது வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பான இலங்கை இராணுவ அதிகாரிகளில் ஒருவர் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளனார்.

55 வயதினை எட்டிய நந்தன உடவத்த நேற்று முன்தினத்துடன் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுச்சென்றுள்ளார்.

கவசப்படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக இருந்த இவருக்கு, கொழும்பில் உள்ள இலங்கை இராணுவ கவசப்படைப்பிரிவு தலைமையகத்தில் வைத்து இவருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit