மீண்டும் ஐசியூவில் ஜெயலலிதா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Apalo Jeya

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.

அவர் இயற்கையாகவே சுவாசிக்கத் தொடங்கியதால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டன.

அதுமட்டுமின்றி தனி வார்க்கு(விஐபி) மாற்றப்பட்டார், இந்நிலையில் சுவாசிக்க கஷ்டப்படுவதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒருவாரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறிய நிலையில், இந்த செய்தி தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit