சூப்பர் வசதிகளுடன் கலக்க வரும் HTC Bolt மொடல் செல்போன்கள்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

செல்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் HTC நிறுவனமானது, தனது HTC sprint (வேகம்) புதிய ரக செல்போன்களை HTC போல்ட் என்ற பெயரில் விற்பனையை அமெரிக்காவில் தொடங்கவுள்ளது.

அந்த HTC போல்ட்டின் சிறப்பம்சங்கள் வருமாறு,

இந்த செல்போனானது 5.5 அங்குலம் டிஸ்ப்ளே கொண்டதாகும். முழுக்க HD டிஸ்ப்ளேவுடன் வரும் இந்த போன்கள் 1440 x 2560 pixels ரெசல்யூஷஙளை கொண்டுள்ளது.

இந்த HTC போல்ட் போன்களை ஒரு மீட்டர் அளவிலான தண்ணீரில் 30 நிமிடத்துக்கு வைத்தாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது.

இது 3 GB RAM மற்றும் 32 GB Inbuild சேமிப்பு வசதி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் 7.0 இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனானது கைரேகை சென்சார் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் கேமராவை பொறுத்த வரை பின்பக்கம் 16 மெகா பிக்சலும், முன்பக்கம் 8 மெகா பிக்சலையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த செல்போன் 4G வசதி, ப்ளூடூத் , WiFi போன்ற வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

HTC BoomSound Adaptive Audio என்னும் வசதி இதில் இருப்பதால் பாடல்கள் இதில் துல்லியமாகவும், சத்தமாகவும் கேட்கும்.

இதன் விலையை பொருத்தவரை $600 என தற்சமயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*