நடுக்கடலில் உயிருக்குப் போராடிய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடலில் படகு பழுதாகிப் போனதால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

காலி கடற்பகுதியில் மீன்பிடிக்கச்சென்ற நிலையில் படகு செயலிழந்ததால் உயிருக்கு போராடிய ஏழு மீனவர்களே இவ்வாறு மீட்கப்பட்டு காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

கடலில் தங்கி மீன்பிடிக்க கூடிய படகொன்று வணிக கப்பலொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்நிலையில் குறித்த படகானது செயலிழந்து போனதால் மீனவர்கள் கடலில் தத்தளித்தனர்.

எனினும் கரைக்கு வர முடியாமல் நீரில் தத்தளித்த மீனவர்களையும், படகினையும் கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு 9மைல் தொலைவில் இருந்து கரைக்கு கொண்டுவந்துள்ளனர் என காலி தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*