மக்களை பானையிலிருந்து அடுப்புக்குள் தள்ளியுள்ள அரசாங்கம்!

பிறப்பு : - இறப்பு :

மக்கள் விடுதலை முன்னணி வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் சமர்பித்துள்ள வரவு செலவுத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடன், வரி, அபராதம் என நிறைந்துள்ள வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மக்களை பானையில் இருந்து அடுப்புக்குள் தள்ளியுள்ளனர்.

நாட்டை கடன் பொறிக்குள் சிறைப்படுத்தும், அரசாங்கத்தின் இந்த கொள்ளைகார பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்களை அணித்திரட்ட மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுக்கும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit