பிரபாகரனை பாராளுமன்றிக்கு அழைத்த ரணில்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாராளுமன்றில் வரவு செலவு தொடர்பாக நடைப்பெற்று வரும் விவாதத்தில் நாட்டை பாதுகாக்க தங்களது அவயங்களை இழந்த இராணுவ வீரர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக செயல்பட்ட பிக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த சம்பவம் மிகப்பெரிய குற்றம் இதற்கு பதில் கூறவேண்டியது நல்லாட்சி அரசே என தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர்

அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மீது குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட வில்லை. முறைகேடான வகையில் நடந்து கொண்டவர்களை நோக்கியே நீர்த்தாரையும் கண்ணீர் புகையும் பிரயோகிக்கப்பட்டது.

அங்கவீனமடைந்தவர்களை காரணம் காட்டி பிக்குகளும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள். அதனைப் பார்க்கும் போது தேரர்களும் அங்கவீனமடைந்தவர்களா என எண்ணத்தோன்றுகின்றது.

நாட்டில் சட்டத்தை மதிக்காது செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்டுப்படுத்தி சட்டத்தை அமுல் படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.

இப்பொழுது இராணுவத்தினரை காக்க முன்வந்துள்ள பௌத்த பிக்குகள் முன்னைய இராணுவ ஜெனரல் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்ட போது மௌனம் காத்தது ஏன் ? நாம் பக்க சார்பு இல்லாது நடப்பவர்கள் என பிரதமர் பதில் அளித்தார்.

அதனை தொடர்ந்து விமல் வீரவன்ச பல கேல்விகளை பிரதமரிடம் வினாவினார்

தேரர்களுக்கு பங்கம் ஏற்படும் வகையில் பேச வேண்டாம் துட்டகைமுனு காலத்தில் இருந்து தேரர்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர் அதனை மாற்ற வேண்டாம் என ஆவேசமாக கர்ஜித்தார்

தேரர்களுக்கு மதிப்பு கொடுப்பதோடு நாட்டுக்காக யுத்தத்தில் அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பாரிய குற்றமே இதை பிரதமர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரினார்.

வீரவன்சவின் இந்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர்

துட்டகைமுனு பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதே போன்று துட்டகைமுனு ஆட்சி செய்த போது இவ்வாறு பிக்குகள் நடந்துக்கொள்ளவில்லை தலதா மாளிகையின் முன்னேயே தேரர்கள் மல்வத்து பீடத்தை பிளவு செய்வதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர் அதனை வீரவன்ச மறக்க கூடாது என்றும் நினைவுபடுத்தினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*