பப்புவா நியூ கினியாவைத் தாக்கிய 6.6 ரிக்டர் நில நடுக்கம்:சேத விபரம் அறிவிக்கப் படவில்லை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வெள்ளிக்கிழமை 6.6 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பப்புவா நியூ கினியாவின் நியூ பிரிட்டன் தீவின் கடலோரமாகத் தாக்கியுள்ளது.

ஆனால் இப்பூகம்பத்தால் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப் பட்டதாகவோ அல்லது பலத்த சேதம் ஏற்பட்டதாகவோ உடனடித் தகவல் ஏதுமில்லை. முதலில் 6.9 ரிக்டர் எனக் கணிக்கப் பட்ட இப்பூகம்பம் 69Km ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் நியூ பிரிட்டனின் தெற்கு கடலோரத்தில் தாக்கிய இப்பூகம்பம் சுனாமி அலைகளை உற்பத்தி செய்யக் கூடிய வலிமை உடையதே என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதாவது கடலுக்கடியில் 100 Km ஆழத்தில் தாக்கும் சிறியளவு பூகம்பம் கூட சாதாரண அளவில் சுனாமி அலைகளை உற்பத்தி செய்ய வல்லது என பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. பசுபிக் சமுத்திரத்தில் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் பூகம்பங்கள் அதிகளவு தாக்கக் கூடிய பகுதியில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்பிரலில் 7.1 ரிக்டர் அளவுடைய பூகம்பம் பப்புவா நியூகினியாவின் பங்குனா நகரினைத் தாக்கியிருந்ததுடன் இதே பகுதிக்கு அண்மையில் அதற்கு முன் 6.7 ரிக்டரில் இன்னொரு பூகம்பமும் தாக்கியிருந்தது. 2013 இல் பப்புவா நியூ கினியாவுக்கு அண்மையில் சொலொமொன்ஸ் தீவுக்கு அண்மையில் ஏற்பட்ட 8 ரிக்டர் பூகம்பத்தால் உற்பத்தியான சுனாமி அலைகள் தாக்கி 10 பேர் பலியாகி இருந்ததுடன் நூற்றுக் கணக்கான வீடுகள் அழிக்கப் பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*