இலங்கை அரசினால் இனவழிப்புச் செய்யப்பட்ட ஈழத்தமிழரின் நினைவாக மரங்கள் நடப்பட்டுள்ளது.(படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரித்தானியாவிலுள்ள வேல்ஸ்(Wales) நகரத்தில் இலங்கை அரசினால்இனவழிப்புச் செய்யப்பட்ட ஈழத்தமிழரின் நினைவாக மரங்கள் நடப்பட்டுள்ளது.

09.11.2016 புதன் கிழமை அன்று புலம்பெயர் தமிழீழ இளையோர்களாகியசெயற்பாட்டாளர்கள் திரு.கணேசலிங்கம் குகறூபன்,திரு.வேதநாயகம் சஞ்ஜீவதனுஷன் என்பவர்களாலும், பிரித்தானியாவிலுள்ள வேல்ஸ்(Wales) நகரத்தில்வசிக்கும் ஈழத் தமிழ் மக்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டு இலங்கையில் 2009 ல் இறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களுக்களையும்,எம் மண்ணுக்காக வீரச்சாவைத் தழுவிய எம் மாவீரர்களையும்நினைவுபடுத்தும் முகமாகவும்,இலங்கையில் ஈழத் தமிழ் மக்கள் இனவழிப்புச் செய்யப்பட்டதை இவ்வுலகத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு குறியீட்டைத்தாங்கினிற்கும் சாட்சியங்களாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந் நிகழ்வானது பிரித்தானியா வேல்ஸ்(Wales) நகரத்தில் அமைந்துள்ள (Home farm,
SkettyLane,Swansea,Wales) எனும் இடத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் சிறப்புவிருந்தினராக வேல்ஸ் (Wales) நகரத்தில் உள்ள Councilor (Cllr.YvonneJardine,
Cllr. Cheryl Philpott,Cllr.Paul Meara) கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*