அதிகரிக்கும் உடல் எடை….!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் திரையுலகில் ‘கும்கி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன், அந்தப்படத்தின் மூலமே இளைஞர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார் என்றே சொல்ல வேண்டும். அப்போது அவருக்கு வயது 14ஆக இருந்தது.

அதன்பிறகு, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, வேதாளம் உள்பட பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.சமீபத்தில் வெளிவந்த ‘மிருதன்’, ‘றெக்க’ படங்களுக்கு பிறகு லட்சுமிமேனன் எடை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்கனவே இவரிடம் கதை சொன்னவர்கள் “உடம்பு குண்டாகி விட்டதே” என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் தனது பட வாய்ப்புகளுக்கு பிரச்சினை வரலாம் என்று நினைத்த லட்சுமிமேனன், எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார் என்று அவருடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*