அமெரிக்க தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

us-tamil

அமெரிக்காவில், அதிபர் தேர்தலுடன் சேர்ந்து, பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல்வேறு மாகாண சட்டசபை மற்றும் பஞ்சாயத்துகளுக்கும் வாக்குபதிவு நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடத்துக்கு போட்டியிட்டார்கள். அதில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று பேர் இதுவரை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின் பீட்டர் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரின் பெற்றோர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக கட்சி சார்பில், வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் பிரமிளா ஜெயபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.

செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையை கமலா ஹரிஷ் என்ற பெண் பெற்றுள்ளார். இவர் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit