அடுத்து நடக்க போவது தெரியாத அபாய நிலை தென்னிலங்கையில்!

பிறப்பு : - இறப்பு :

அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இலங்கை வரலாற்றின் கருப்பு புள்ளி இது மிகவும் கண்டிக்கப்படத் தக்கது என தாய் நாட்டிற்கான இராணுவ சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த அமைப்பினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் அங்கு தாய் நாட்டிற்கான இராணுவ சங்கத்தின் தலைவரான ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன கருத்து தெரிவிக்கையில்,

ஓய்வூதிய கொடுப்பனவு வேண்டி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கண்டிக்கப்படத்தக்கது எனவும், இது தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்பு செயலாளர் போன்றோர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை வேண்டும் என்றே சத்தம் எழுப்பி சீண்டியதோடு பகிரங்கமாகவும், முறைகேடான வகையிலும் பிக்குகளுடன் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க முயன்ற காரணத்தினாலேயே பொலிஸார் கண்ணீர் புகை மட்டும் நீர்த்தாரை பிரயோகித்தனர்.

பொலிஸார் நீர்த்தாரை பிரயோகிப்பதை எதிர்ப்பார்த்து வேண்டும் என்றே பிக்குகளும் வெளியாரும் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முயற்சித்தமைக்கும் இதனை அனைவரிடமும் பகிர வேண்டும் எனவும் தகாத வார்த்தைகளை பிரயோகித்தும் வெளியிட்டுள்ள காணொளி இதனை ஆதாரத்துடன் நிரூபிக்கின்றது.

எனினும் குறித்த ஆதாரங்கள் மறைக்கப்பட்டு இராணுவத்தினர் மீது முறைகேடான வகையில் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி அரசுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இதன் மூலம் இராணுவமும் மக்களும் ஆட்சிக்கு எதிராக திசை திருப்பப்படுவதோடு இனவாதக்கருத்துகளும் தென்னிலங்கையில் வெளியிடப்பட்டு வருகின்றது.

அத்துடன் சிங்கள மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் பிக்குகள் தரப்பும் ஆட்சிக்கு எதிரான சக்திகளும் கோரிக்கைகள் விடுத்து கொண்டுள்ளனர்.

மேலும் இதன் காரணமாக இராணுவம் ஆட்சியோடு முரண்பட்டு கொள்ளும் அபாய நிலையுடன் அடுத்து தென்னிலங்கையில் என்ன நடக்கும் என்பது தெரியாத அபாயம் காணப்படுவதாகவும் தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit