விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இங்கிலாந்தில் தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில்!!! (Video)

பிறப்பு : - இறப்பு :

இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதுகுறித்த படமும் செய்தியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பாக்கிளேஸ் பேங்கில், நீங்கள் விரும்பும் புகைப்படத்தைக் கொடுத்து உங்கள் ஏ.டி.எம் கார்டில் பிரின் செய்ய முடியும். அந்த வகையில் பலர் இது போல தேசிய தலைவரது படத்தை கொடுத்து தமது டெபிட் கார்டுகளை எடுக்கிறார்கள்.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட செய்தியில், இலங்கை தமிழர்களின் வீரத்தின் விதையாகவும் வீழ்ந்து விடாத லட்சிய நெருப்பாகவும் எம்மை வழி நடத்தும் தேசியத்தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளமை ஒட்டு மொத்த தமிழர்களின் பெருமையையினையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit