கமலுக்கு வயது 60……..

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கலைஞானி, உலகநாயகன் என்று புகழப்படும் கமல் ஹாஸன் இன்று தனது 60வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்திய திரையுலகின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் கமல் ஹாஸன். படங்களில் அவரைப் போல வித்தியாசமான நடிப்பைக் காட்டிய கலைஞர் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.

நட்சத்திர ஒளிவட்டம், கூடவே அபார நடிப்புத் திறமை இரண்டும் அமையப்பெற்ற கமல், சினிமாவில் ஒரு சகலகலா வல்லவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, நடனம், ஒளிப்பதிவு என அனைத்து நுட்பங்களையும் அவற்றின் நவீன மாறுதல்களையும் புரிந்து, தன்னையும் அப்டேட் செய்து கொள்ளும் அபார திறமைசாலி கமல். கமர்ஷியல் சினிமா, மாற்று சினிமா என இரு வேறு தடங்களை சினிமாவில் சிலர் ஏற்படுத்த முனைந்தனர்.

ஆனால் கமலோ, இரண்டையுமே ஒன்றாக்கி சாதித்தவர். களத்தூர் கண்ணம்மாவில் தனது திரை வாழ்க்கையை கமல் ஆரம்பித்தபோது அவருக்கு வயது 5. தொடர்ந்து வெற்றிப் படங்கள் பலவற்றின் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். குழந்தையும் அல்லாமல் குமரனும் அல்லாத ஒரு இரண்டுங்கெட்டான் பருவம் வந்தபோது, திரைத் தொழில் நுட்பங்கள், நடனம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் காட்டி கற்றுக் கொண்டார்.

பின்னாளில் நட்சத்திர நடிகனாக உயர்ந்த போது, அவர் கற்றுக் கொண்ட அத்தனையையும் திரையில் பயன்படுத்தினார். அதனால் அவருக்கு நிகரான கலைஞர்களே இல்லை எனும் நிலையை ஏற்படுத்திக் கொண்டார். 60 வயதில் 55 ஆண்டுகள் சினிமா வாழ்க்கைதான் என்பது வேறு யாருக்கும் அமையாத அரிய விஷயம்தான். இந்த 55 ஆண்டுகளும் கமல் ஒரு முழுமையான சினிமாக்காரராகவே இயங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இன்று 60 வயது. இந்த வயதிலும் அவர் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த இரு படங்களின் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ‘என் வருத்தமெல்லாம், நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருக்கப் போகிறேன் என்பதுதான்.

வயசு பத்தலையே என்பது, இன்னும் அதிக சினிமாக்களைத் தரமுடியாமல் போகிறதே என்பதற்காகத்தானே தவிர, அதிக காலம் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல. இருக்கிற இந்த கொஞ்ச காலத்துக்குள் இன்னும் அதிக படங்களைத் தரவேண்டும். வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் உள்ளது..” -இது கமல் அடிக்கடி சொல்லும் விஷயம். கமல் நம்பும் இயற்கையோ, பெரும்பான்மையானோர் நம்பும் இறைவனோ.. கமலின் ஆதங்கத்தைப் போக்கி, ஆரோக்கியத்துடனான நீண்ட ஆயுளைத் தந்து, திரையுலகை ஆசீர்வதிக்கட்டும்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் ஹாஸன்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*