HSBC வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பாதிக்கும் குறைவானவர்கள் கணக்கில் பணமே இல்லை?

பிறப்பு : - இறப்பு :

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் மேற்பட்டவர்களின் கணக்கில் பணமே இல்லை என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

HSBC யின் வெளிநாட்டு வங்கிகளில் ஜெனீவா கிளை 628 இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை வழங்கியுள்ளது. இவர்களின் கணக்குகள் குறித்து நீதிபதி முட்கல் குழு அளித்துள்ள அறிக்கையில் பாதிக்கு மேற்பட்டவர்களின் கணக்குகளில் பணமேஇல்லை எ ன்று தெரிய வந்துள்ளது. அதோடு 122 இந்தியர்களின் பெயர்கள் இரண்டுமுறை இடம்பெற்றுள்ளது என்கிற குற்றசாட்டையும் புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு மீதமுள்ள கணக்குகளில் பணமே இல்லை என்றும், கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டவை என்று கூட தெரிவிக்கப்படவில்லை என்றும் புலனாய்வுக் குழுத் தெரிவிக்கிறது.

இது பாஜக தலைமையிலான மத்திய அரசில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவிர மற்ற நாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் குறித்த விவரங்கள் இன்னும் என்னென்ன சிக்கலை உண்டாக்கப்போகிறதோ என்கிற கவலையும் அருண் ஜெட்லிக்கு எழுந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit