சிரியாவில் அமெரிக்க விமானத் தாக்குதலில் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளர் பலி

பிறப்பு : - இறப்பு :

புதன்கிழமை இரவு சிரியாவின் இட்லிப் நகருக்கு அருகே அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் கொரசன் குழுவைச் சேர்ந்தவரும் முக்கிய வெடிகுண்டுத் தயாரிப்பாளருமான பிரெஞ்சு ஜிஹாதிஸ்ட் கொல்லப் பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளனர்.

டேவிட் ட்ருஜென் என்ற குறித்த நபர் பருவ வயதிலேயே இஸ்லாமுக்கு மாறியதாகவும் அதன் பின்னர் பாகிஸ்தானுக்கும் பின்னர் சிரியாவுக்கும் பயணம் செய்து போராளிக் குழுவுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்று தெரிவிக்கப் படுகின்றது.

இவர் பயணம் செய்து கொண்டிருந்த வாகனம் மீது அமெரிக்காவின் விமானங்கள் குண்டு வீசியதில் பலியானதாகவும் 20 வயதுடைய இந்த இளைஞன் பாகிஸ்தானில் இயங்கி அரும் அல்கொய்தாவின் முக்கிய உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சிரியாவுக்கு இடம்பெயர்ந்த மூத்த அல்கொய்தா தலைவர்களால் கொரசான் குழு ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்த்தப் பட்ட அமெரிக்காவின் விமானத் தாக்குதல் மூலம் கொரசான் குழுவின் பல வாகனகங்களும் கட்டடங்களும் கூட அழிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை புதன்கிழமை யேமெனில் அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் விமானங்கள் தொடடுத்த தாக்குதலில் முக்கிய அல்கொய்தா தலைவரான ஷாவ்கி அல்-படனி கொல்லப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நபர் மத்திய கிழக்கில் சில இடங்களில் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப் பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit