விபச்சார குற்றச்சாட்டில் கைதான பிரபல நடிகை.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

protude

இந்தியாவின் பூனே பொலிஸார் நட த்திய சுற்றிவளைப்பில் மொடல் அழகியான ஆர்ஷி கான் விபச்சார குற்றச்சாட்டில் கைதானார்.

மொடல் அழகி மற்றும் நடிகையாக அறியப்பட்ட அவர் முன்னதாக தன்னை கிரிக்கட் நட்சத்திரம் சயிட் அப்ரிடியின் காதலி என அடையாளப்படுத்தி வந்திருந்தார்.

இந்நிலையிலேயே கடந்த மாதம் 24 ஆம் திகதி பூனே குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றி வளைப்பில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

எனினும் பின்னர் ஒருவாறு தப்பித்த அவர் பல தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார்.தான் ஹோட்டலில் தனிப்பட்ட விடயமொன்று தொடர்பில் தங்கியிருந்த தாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் தன்னிடம் பணம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தான் மறுத்ததைத் தொடர்ந்து, தன்னிடம் பாலியல் லஞ்சம் கோரியாதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கும் மறுத்தமையை அடுத்தே தான் கைதுசெய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தான் ஒரு ஓர் இட த்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அங்கே பராமரிப்பாளரும் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்த பணம் மற்றும் உடமைகளையும் பறிக்க முயன்றதாகவும் அதனைத் தொடர்ந்தே தான் தப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பொலிஸார் அவரது குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit