
பாரீஸ்: பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் கடைக்குள் புகுந்து கடுமையாக சண்டை போட்டுக் கொண்ட தமிழர்கள் சிலரால் கடையே சூறையாடப்பட்டது.
பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களின் இந்த சண்டையை கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.
பாரீஸின் லா செப்பல் என்ற இடத்தில் தமிழகத்தின் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உள்ளது. இது இப்பகுதியில் பிரபலம். தமிழர்கள் மட்டுமலல்லாமல் பிரெஞ்சுக்காரர்களும் கூட சிக்கன், மட்டன் பிரியாணி உள்ளிட்ட அசைவ வகையறாக்களை ஒரு பிடி பிடிக்க வருவது வழக்கம்.
இந்தநிலையில் இந்த ஹோட்டலில் சில நாட்களுக்கு தமிழ் இளைஞர்களின் இரு பிரிவுக்கிடையே கடையில் வைத்து கோஷ்டி மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் சரமாரியாக மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் கையில் கிடைத்ததை எடுத்து வீசிக் கொண்டனர். இதனால் கடையே சூறையாடப்பட்டது.
இவர்களின் சண்டையில் சிக்கி காயப்படாமல் இருக்க மேசை, சேரை எடுத்து கேடயம் போல பயன்படுத்திக் கொள்ளும் நிலையும் கடைக்காரர்களுக்கு ஏற்பட்டு விட்டது.
இந்த சண்டையை பிரெஞ்சுக்காரர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கும் அளவுக்கு சண்டை செம சூடாக இருந்தது.