விஜய் படத்தை கைப்பற்றிய தனுஷ்..!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

சமீபத்தில் தனுஷின் அனேகன் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுவிட்டது. இப்படத்தில் தனுஷ் நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் அனேகன் படம் குறித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் முதல் முறையாக ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கூறியிருக்கிறார்.

அனேகன் படத்தின் கதையை விஜய்யை மனதில் வைத்துதான் எழுதினேன். இப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறினேன் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது, படத்தை உடனே துவங்க வேண்டுமென்று விரும்பினேன் நான், ஆனால் விஜய்யின் கால்ஷீட் தேதிகள் இல்லாததால் அனேகன் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. இந்த படத்தில் யாரை நடிக்க வைப்பதென்று பெரும் குழப்பத்திலிருந்த எனக்கு விஜய் தான் தனுஷை வைத்து இந்த படம் எடுங்கள் நன்றாக இருக்கும் என்று கூறினார் விஜய்.

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்பதனால் அவருடைய பேச்சை மதித்து தனுஷை இந்த படத்தில் நடிக்க வைத்தேன். ஆனால் நான் நினைத்ததைவிட தனுஷ் அசாதரணமான திறமைசாலியாக இருக்கிறார். கேமரா கோணங்களை மனதில் வைத்து அவரின் கண் கூட அந்த கேமராவை விட்டு விலகாத அளவுக்கு டெடிகேஷனோடு நடித்தார். இந்த மாதிரி நடிப்பை நான் மோகன்லாலிடம் தான் பார்த்திருக்கிறேன் என்று தனுஷை புகழ்ந்து தள்ளிவிட்டார் கே.வி.ஆனந்த்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit