கல்லறை தழுவும் கானங்கள்….

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கார்த்திகை நாளிலே கண்திறந்தெங்களின்
கண்ணெதிர் தோண்றிடும் செல்வங்களே!
உங்கள் கல்லறை முன்தனில் நெய்விளக்கேற்றியே நெஞ்சினில் நிறுத்துகிறோம்.

இலட்சிய விடுதலை வேள்வியில் நீங்களும்
சிந்திய குருதியினால்
இன்று செந்தமிழீழமும் எங்களின் கண்ணெதிர்
தெரியுது மாவிரரே!

எத்தனை துன்பங்கள் எத்தனை துயரங்கள்
எதிர் வந்த போதினிலும்
ஈழமண்ணின் விடுவிற்காய்
மரணித்த உங்களை
மலர் தூவி வணங்குகின்றோம்.

மண்வாழ தமிழ்வாழ தன்னுயிர் ஈந்து
விடுதலை தீபமாய் ஒளிர்ந்தவர் மாவீரர்
கல்லுமலை காடுகள் தாண்டியும்
களம்பல கண்டும் கலங்காத
உறவுகள் – இருளுள் இருளாகி
ஒளியாய் ஈழம் மலர வழிசெய்தவரும்
இன்னுயிர் தனை எமக்காய் ஈந்து
இமயம் தன்னில் இடியாய்
ஆனவரும் – தமிழ்வாழ முகம்மறைத்து
முகவரிதனை ஒளித்து
ஈகத்தின் விழிமியத்தில் ஒளியாகிய
எங்கள் வரலாற்று நாயகர்கள்
மாவீரர்கள்…

மாவீரரே!மரணம் உங்களிடம்
மண்டியிட்டது விடுதலை உங்களிடம்
புதிதாய் பிறந்து கொண்டது
வீர வரலாறு நிமிர்ந்தது
தமிழ் வாழ எமது பணியும் விடுதலைக்காய்…

தேடிவரவேண்டும் உறவு

மாரிமழையாகி நீர் தெளித்து ஆடி
மண் குளிரச் செய்த முகில்கள்.
மாதவங்கள் செய்த போதெமது பூமி
மடிலுருவான உயிர்கள்.
போரில் விழையாடும் வேளையுடல் வீழ்ந்த
போதுமுயிரான சிலைகள்.
பூங்குயில்கள் பாடும் ஈழுமதை வாங்கப்
போரிலுயிர் ;தந்த புலிகள்.

மாலைமணி ஆறு ஆகும் பொழுதாக
மாரிமழை கொஞ்சம் ஓயும்.
மாலை மலர் சாத்தித் தீப ஒளி காட்டும்
வேளைவிழி ஆறு பாயும்.
சாலை கடையோடு வீடுயென யாவும்
சாமிதுயிலில்லம் கூடும்.
சாதி மதம் என்று வேறு படலின்றித்p
தேவநிலை கொண்டு பாடும்.

வாரிஎடுத்தும்மை வாசல்தனில் வைத்து
வாசமலர் தூவும் பொழுதில்
வந்தெமது கண்ணில் நின்று தெரிகின்ற
வாறு வரiவேண்டும் அருகில்
தேரிலெழுந்தெங்கள் தீப ஒளி காண
தேடிவரவேண்டும் உறவு
தேசமெலாமின்று வீசும் குளிர் காற்றில்
சேர்ந்தெழவேண்டும் சிறகு

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*