இனி நோக்கியா வெறும் வரலாறு மட்டுமே.. புதிய பிராண்டாக உருவாகும் “மைக்ரோசொப்ட் லூமியா”!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகளவில் மொபைல் தயாரிப்பில் முன்னோடியாக இருந்த நோக்கியா நிறுவனம் இன்று சந்தையிலும், சந்தை போட்டியிலும் இருந்து வெளியேறியது. இன்னும் கனகச்சிசமாக சொல்ல வேண்டும் என்றால் இனி நோக்கியா நிறுவனம் வெறும் வரலாறு மட்டுமே.

நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசொப்ட் கைபற்றியதில் இருந்து பல மாற்றங்களை நோக்கிய நிறுவனம் சந்தித்த வருகிறது. இந்நிலையில் நோக்கியா நிறுவன பெயரை “மைக்ரோசொப்ட் லூமியா” என்று மாற்ற துவங்கியுள்ளது மைக்ரோசொப்ட்.

உலகம் முழுவதும் ஓரே நேரத்தில் பெயர் மாற்றுவதில் கால தாமதம் ஏற்ப்படுவதால் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒவ்வொரு நாடுகள் வாரியாக பெயர் மாற்றம் செய்ய துவங்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் மாற்றம் செய்துள்ளது. மேலும் சமுக வலைதளமான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இதர தளங்களிலும் பெயர் மாற்றத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இனி இந்தியா மற்றும் உலக நாடுகளில் வெளியாக இருக்கும் லூமியா போன்களில் நோக்கியாவில் பெயர் இருக்காது. மேலும் நோக்கியாவின் அடையாளம் எதுவுமே இனி இருக்காத வகையில் மைக்ரோசொப்ட் மாற்றங்களை செய்ய உள்ளது.

பெயர் மாற்றம் பிரான்ஸ் நாட்டில் துவங்கியதை தொடர்ந்து, இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் இறுதிக்குள் பெயர் மாற்றத்திற்கான பணிகள் நிறைவு பெறும் என மைக்ரோசொப்ட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மேலும் பெயர் மாற்றத்திற்கு பிறகு இந்தியாவில் மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த லூமியா 730, லூமியா 830, லூமியா 930 மாடல் போன்களில் விற்பனை நிலையில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் உலக நாடுகளில் மொபைல் சந்தையில் வெளியாக இருக்கும் முக்கிய மற்றும் குறிப்பிடதக்க மொபைல் மாடல்களில் மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்புகள் இருக்கும் என மைக்ரோடசொப்ட் இந்தியா நிறுவனத்தின் ஜோ ஹார்லோவ் தெரிவித்தார்.

நோக்கியா நிறுவனத்தை கடந்த ஏப்ரல் மாதம் 7.2 பில்லியன் டாலருக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம் கைபற்றியதன் மூலம் இந்நிறுவனம் பல மாற்றங்களை சந்தித்தது. அதில் சில முக்கியமானவை விற்பனை சூத்திரத்தில் மாற்றம், நோக்கிய எக்ஸ் தயாரிப்புக்கு தடை, ஆஷா மாடல் போன்களுக்கு தடை.

இந்த புதிய இணைப்பின் மூலம் மைக்ரோசொப்ட் நிறுவனம் சுமார் 18,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்தனர். மேலும் 550 இந்திய பணியாளர்களை மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.

நோக்கியா நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்ததை தொடர்ந்து டாப் 5 மொபைல் நிறுவனங்களில் மோட்டோரோலா நிறுவனம் 5 சதவீத சந்தை மதிப்புடன் டாப் 5 இடங்களுக்குள் நுழைந்தது.

மைக்ரோசொப்ட் மொபைல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஜய் மேத்தா கூறுகையில் இந்தியாவில் எங்களது விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள் கவர நாங்கள் 100 டாலருக்கும் குறைவான விலையில் மொபைல்களை வெயிட உள்ளோம் என்று கூறினார்.

மேலும் உலகளவில் அதிகளவில் மொபைல் ஓ.எஸ் பயன்பாடுகளில் உள்ளவை முன்று. அதில் கூகிள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆகியவை ஆகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

2 comments

  1. Who Views your faceb00k Prof!le ? and photos! Find out now. 325,000 people using this Application. apps.facebook.com/frprofview/

  2. Who Views your faceb00k Prof!le ? and photos! Find out now. 325,000 people using this Application. apps.facebook.com/frprofview/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*