சூர்யா படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை. வெங்கட்பிரபு அதிர்ச்சி.

பிறப்பு : - இறப்பு :

அஞ்சானில் அடிவாங்கிய சூர்யா, அதை தேற்றும் விதமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது ‘மாஸ்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் எமி ஜாக்சன் மாஸ் படத்தில் இருந்து திடீரென விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மாஸ் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு வெயிட்டான கேரக்டர் என்றும் தன்னுடைய கேரக்டர் டம்மியாகவும் இருப்பதால் படத்தில் இருந்து விலகியதாக எமி ஜாக்சன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

மேலும் ‘ஐ’ திரைப்படம் ரிலீஸானால் தன்னுடைய ரேஞ்சே வேற மாதிரி இருக்கும் என எமி ஜாக்சன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றார். எனவே தற்போது எமிஜாக்சனுக்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்ய வெங்கட்பிரபு முடிவு செய்துள்ளார்.

தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கும் வெங்கட்பிரபு சென்னை திரும்பியவுடன் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. அமலாபால், டாப்சி, மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர்களில் ஒருவர் மாஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit