வாளெடுத்து ஒரு வீச்சு……

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முன்னைத் தமிழ் எங்கள்
அன்னைத் தமிழ் இன்று
சென்னைத் தமிழ் ஆகிப் போச்சு

கன்னல் சுவை தரும்
கற்கண்டுக் கவிதைகள்
கண்ணா பின்னா என்று ஆச்சு

நல்ல தமிழாலே
நாலு வார்த்தை சொன்னால்
என்ன என்றே ஒரு ஏச்சு

இன்று வண்ணம் மறந்தொரு
வானவில்லைப் பற்றி
என்னென்னவோ ஒரு பேச்சு

வேற்று மொழி சேர்த்து
வேதனை செய்யுது
நாட்டில் தமிழெனும் மூச்சு

இனி வாட்டி வதைத்திடப்
போட்டியிடுவோரை
வாளெடுத்து ஒரே வீச்சு

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*