வரலாறு திருடர்கள்? ஜாக்கிரதை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

குமரி மாவட்ட காங்கிரசார் சுயநலம் நேடும் நோக்கில் காமாராசரை தந்தையாக ஏற்று பாண்டிக்காட்டான்களுக்கு அடிமைகளாகிவிட்ட நாளிலிருந்து குமரிக் காங்கிரசின் சுயநிர்ணய அதிகாரம் பறிபோய் விட்டது. எம்.பி. மற்றும் எம்.எல்.எ. தொகுதிகள் வந்து நிலை கொண்டுள்ளனர். அதுவாவது மிஞ்சுமா என்பதை வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே சொல்ல முடியும்.

குமரி மாவட்ட காங்கிரஸ் அதன் தந்தை நேசமணிக்கு தகுந்த நினைவுச்சின்னம் அமைக்க முன்வரவில்லை. காமராசருக்கு அமைப்பதிலேயே தீவிரம் காட்டி வருகின்றது. குமரியில் காங்கிரஸ் கட்சிக்கு சமாதி கட்டும் நோக்கில், மார்ஷல் நேசமணி மணிமண்டபம் என்ற கோஷத்துடன் தி.மு.க அரசு களம் இறங்கியது. 2011 ஜனவரி 18-ல் அதற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் நடந்தது. இதை ‘தேர்தல் ஸ்டன்ட்’ என்று அ.தி.மு.க. சிறுபான்மைப் பிரிவு தலைவர் திரு. ஜஸ்டின் செல்வராஜ் வருணித்தார்;. குன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தி.மு.க. அரசு அடிக்கல் நாட்டியதையும், அந்த திட்டத்துக்கு நிதியும் ஒதுக்கி அ.தி.மு.க. அரசு செயல் வடிவம் தiவேண்டி வந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

கல்நாட்டு விழா அழைப்பிதழில் மார்ஷல் நேசமணி மண்டபம் என்றிருந்தது. நட்டப்பட்ட கல்லிலும் அவ்வாறு தான் இருந்தது. “குமரித்தந்தை” என்று எங்குகும் குறிப்பிடவில்லை. இது ஒரு திட்ட மிட்ட கூட்டு சதி என்பதை திட்டவட்டமாகக் கூற முடியும். வரலாறு திருடர்களின் இந்த பொக்கை உன்னிப்பாகக் கவனித்துக் கொடிருந்த மூத்த குடிமக்கள் பலர், 2007 டிசம்பர் சமுதாய சிந்தனை இதழில் வெளி வந்த, இளந்தோட்டம் சுகுமாறன் அவர்களின் ஆய்வுக்கட்டுரையை பிரசுரிக்க வேண்டிக் கொண்டனார். எனவே மீண்டும்…

குமரித்தந்தை காமராஜரா? நேசமணியா?
தமிழ் மண்ணை இழந்தவரா? மீட்டவரா?
குமரித் தந்தை காமராஜரா? நேசமணியா?
தமிழ் மண்ணை இழந்தவரா? மீட்டவரா?

குமரி மாவட்டம் உருவாகி 54 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த மாவட்டம் உருவானதன் நோக்கம் என்ன என்பதை அனேகமாக அனைவரும் மறந்து விட்டனர்;. குறிப்பிட்டுக் கூறுவதென்றால், நாடார் சமுதாயமே இந்த வரலாறை மறந்து விட்டது என்பதை நினைக்கும் போது என்னைப் போன்ற மூத்த குடிமக்களுக்கு வேதனையாக உள்ளது. இம்மாவட்டம் 01.11.1956 அன்று உருவாயிற்று என்றாலும் நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாhளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் நாடார் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது. பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து மகிழ்ச்சியடைந்தனர் உயர் ஜாதியினர். இந்த சூழ்நிலையில் தான் சீர்திருத்த கிறிஸ்தவ இறைத் தூதுவர்கள் கி.பி. 1806-ல் இம்மண்ணில் கால் பதித்தனர். இவ்வமையம், இங்கு வாழ்ந்து இறைத் தூதுவர்கள் விடா முயற்சியால் இந்த தாழ்த்தப்பட சமூகம், குறிப்பாக நாடார் மக்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சியடைந்தனர். அறிவுபூர்வ வளர்ச்சியால், 1822 –ல் புலிப்புனம் இசக்கி மாடன் தண்டல்காரன், மருதூர்குறிச்சி குஞ்சுமாடன் மண்டல்காரன், ஆற்றூர் கருமன், தச்சன்விளை வேதமாணிக்கம் போன்றோர் நாடார் மக்களின் விடுதலை வேண்டி உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதாயிற்று, எனினும் நாடார்களுக்கு மலையாளி மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளிலிருந்து, முழுமையான விடுதலையைப் பெற்றுத்தந்தவர் விளவங்கோட்டு வீரன் ஏ. நேசமணி ஆவார். எனவே ம.பொ. சிவஞான கிராமணியார் எண்ணுகின்றதைப் போன்று, இது தெற்கெல்லை மீட்பு போராட்டமோ, அல்லது தமிழகத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான போராட்டமோ, அல்லது தமிழ் மொழியின்பால் உருவான பாசமோ அல்ல. அது மலையாளி ஆதிக்கத்திற்கு எதிராக நாடார்களால் நடத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். அப்போராட்டதை தலைமையேற்று செல்வனே நடத்தி விடுதலையை பெற்றுத் தந்தவர் மார்ஷல் எ. நேசமணி அவர்கள்.

ஆனால் இன்று, வேறு பலரை குமரித் தந்தையாக்குவதற்கான முயற்சியில் பலர் இறங்கியிருக்கின்றனர். முக்கியமாக களமிறக்கி விடப்பட்டுள்ளவர்கள் மூவர். அவர்களில் இருவர் நாஞ்சில் நாட்டு வெள்ளாள சமுதாயத்தைச் சார்ந்தவர்களும், மற்றவர் வெளிமாவட்டத்தவரும் ஆவார். பிள்ளைகளில் ஒருவர் திரு. மூக்காண்டியாவார். ஆம்! இவரேதான் “மூக்குக்குத்தி மூக்காண்டி என்று பெயர் சூட்டப்பட்டு பின் குல தெய்வப் பெயரான சொரிமுத்தாகி, அதன் பின் ஜுவானந்தம், ஜுவா”, ஆனார், (பெருந்தலைவர் காமராசர், அரு. சங்கர்)

தி.த.நா.கா. சர்வாதிகாரி திரு. குஞ்சன் நாடார் 09.08.2954-ல் விடுதலை நாள் கடைபிடிப்பதற்கு நிச்சயித்திருந்தார். ஆனால் ஜுவாவின் பேச்சை நம்பி, அதை 11.08.1954 க்கு மாற்றினார். “கம்யுனிஸ்டு கட்சியின் திருவிதாங்கூர் சமஸ்தான கிளையால் அனுப்பப்பட்டே ஜுவா இந்த ஆலோசனையைச் சொன்னார் … இதனால் ஏதோ பெரிய விபரீதம் நடக்கப் போகிறது என்று ஐயுற்றேன். என் ஐயம் பொய்யாகவில்லை. 11.08.1954-ல் நடக்கவிருந்த பொது வேலை நிறுத்தத்தை ஒத்திப்போட்டு விட்டதாக கம்யூனிஸ்டு செல்வாக்கிலிருந்த – கேரளர்களால் நடத்தப்பட்டு வந்த தொழிற்சங்கங்கள் கடைசி நேரத்தில் – அதாவது ஆகஸ்டு 10-ல் அறிக்கை விட்டுவிட்டன – கதையை வளர்ப்பானேன். ஆகஸ்டு 11-ல் மார்த்தாண்டம் என்னும் ஊரில் – ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது மலையாளப் போலிசார் சுட்டனர். ஆதனால் 11 தமிழர்கள் இறந்தனர்.” (எனது போராட்டம்- ம.பொ.சி)

ஜுவாவின் இந்த கைங்கரியத்தால் 11 தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டது. இதில் நாஞ்சில் நாட்டார் எவருமில்லை. ஜுவாவை நம்பி களத்தில் இறங்கிய குஞ்சன் நாடார் மலையாள போலீசாரால் அடித்து நொறுக்கப்பட்டு குற்றுயிரானார். தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஜுவா குமரியில் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாவது கூறியிருக்கலாம். ஆனால் அவரோ தலைமறைவாகிவிட்டாராம். “நாகர்கோவிலிலிருந்து புறப்படும் முன் திரு. ப. ஜுவானந்தம் அவர்களைச் சந்திக்க முயன்றேன். அவர் தலைமறைவாகி விட்டார் என்று சொல்லப்பட்டது. புரட்சிக்கு மக்களைத் தூண்டிவிடும் தலைவர்கள் தலைமறைவாகி விடலாம். ஆனால் அவர்களை நம்பிப் புரட்சியில் ஈடுபட்ட மக்களெல்லாம் தலைமறைவாகிவிடுவது சாத்தியமில்லையல்லவா” (எனது போராட்டம்- ம.பொ.சி)

ஜுவானந்தம் தலைமறைவாகி விட்டதாக ம.பொ.சி. இங்கே கூறுகிறார். ஆனால் மு.டு.ளு.சந்தானமோ ஜுவா, காடும் மலையும் கடந்து பணகுடி சென்று, சென்னைக்கு ஓடிவிட்டார் என்று கூறுகிறார். “கடுக்கரை தொண்டு வழியாக காலில் கொப்புளங்கள் ஏற்பட நடந்து பணகுடி வந்து பின் வள்ளியூர் கலா ஸ்டுடியோவிற்கு வருகை தந்தார்.” (ஆய்வு களஞ்சியம்- ஏப்ரல் 2007)

ஆக ஜுவா, கலவரத்தைத் தூண்டி விட்டுவிட்டு, ஒளந்தோ, ஓடியோ, நடந்தோ, திருவவிதாங்கூரை விட்டு வெளியேறி தன்னுயிர் காத்துக் கொண்ட வீரனானார். இதுதான் திரு-தமிழகப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பெரும் பங்கு. ஆனால் திரு. நேசமணியோ, எங்கும் ஓடிவிடாமல், தலைமறைவாகாமல், தனது நாட்டில், வருவதை எதிர்கொள்ள தயார் நிலையில், பிரசினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு செயலில் இறங்கி அதில் வெற்றி வாகை சூடி குமரிக்குத் தந்தையானார். ஆனால் ஓடிவிட்டவருக்கு மணிமண்டபம், உருவச்சிலை, மற்றும் சிறப்புகள் அளிக்கப்பட்டுவிட்டன. மேலும் சிறப்புகள் வேண்டுமாம். அன்னாரை குமரித்தந்தையாக்கும் முயற்றியும் தொடர்கிறது.

இரண்டாவதாக நாஞ்சில் நாட்டாரால் தூக்கிப்பிடிக்கப்படுகின்றவர் சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி. அவர் தனது வாயாலே கூறுகிறார்: “கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை காணுகிறேன்- நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க ணே;டுமென்று என் எதிர்பார்ப்பு”. (பி.எஸ். மணி 12.06.1964-ல் திரு. நேசமணிக்கு எழுதிய கடிதத்திலிருந்து)

திரு. பி.எஸ் மணியே நேசமணிக்கு “குமரித் தந்தை” என்ற சிறப்பை அளித்து விட்ட நிலையில் மணியவர்களை குமரித் தந்தையாக்குவதற்கு இந்த நாஞ்சில் நாட்டார் முயற்சிப்பானேன்? இதிலிருந்து குமரி மாவட்டம் பிரிவதற்கு திரு. பி.எஸ் மணி ஆற்றிய பணிகளின் பரிணாமம் என்ன என்பதை நாம் யூகித்தறியலாம்.

துப்பாக்க்சி சூடு 11.08.1954-ல் நடைபெற்றது. 11 உயிர்கள் பலியாயின என்று ம.பொ.சி.யும் கூறுகிறார். இவர்களில் ஒருவர் கூட நாஞ்சில் நாட்டான் இல்லை. இப்படியொரு பெரும் இழவு இங்கே நடந்திருக்கின்ற வேளையில், மனித நேயம் படைத்த எந்த மனிதனுக்காவது திருவிழா, திருவிழர் சார்ந்த விருந்து உண்பதற்கு மனம் இடம் தருமா? ஆனால் அந்த மனம் திரு. பி.எஸ். மணிக்கு வந்தது. “1954 ஆகஸ்டு 14-ல் திருச்சியில் தமிழரசுக் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு திரு. தமிழகப்பிரதிநிகளாக கலைஞர் டி.கே. சண்முகம், பி.எஸ். மணி, தோவாளை சி. சிவதாணு மற்றும் பி. வீரபத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.” (மபொ.சி. – “தமிழரசுக் கழகத்தில் பி.எஸ்.மணி”, மணி சிறப்பு மலர் 1987) ஜுவாவும் மணியும் வெள்ளாம் பிள்ளைகள்.

ஆனால் நேசமணி எந்த மாநாட்டுக்கும் ஓடிச் சென்று விருந்து உண்டு மகிழவில்லை. அவர் துயருற்றவர்களின் கண்ணீரைத் துடைப்பதில் இங்கே ஈடுபட்டிருந்தார். சிறைச்சாலைகளிலிருந்து தமிழர்களை எவ்வாறு விடுவிக்கலாம் என்பதில் அவர் சிந்தித்தவராக இருந்தார்.

இவர்களிருவருக்கும் பிறகு மூன்றாவதாக, பெருந்தலைவர் திரு. கு. காமராசரை “குமரித் தந்தை” என்ற தோரணையில் இன்று புகழாரங்கள் பாடித்திரிகின்றனர் சிலர். அவர் நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதுமல்லாமல் தமிழ்நாட்டிற்கு 1954 முதல் 1963 வரை சுமார் ஒன்பதரையாண்டு காலம் முதலமைச்சராக இருந்தார் என்பதற்காகவும் அவரை இங்குள்ளோர் மகிமைப்படுத்துகின்றனர் போலும்.

பெருந்தலைவர் கு. காமராசர், நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் சமுதாயத்திற்கு சிறப்பு என்பதில் வேறு கருத்தில்லை. ஆனால் இச்சமுதாயத்திற்கு எத்தகைய நன்மையும் இவரால் கிடைக்கவில்லை என்பதை அன்னாருடன் பல காலம் வாழ்ந்தவரும், மணவாளக்குறிச்சியைச் சார்ந்த இசுலாமிய சமுதாயத்தைச்சார்ந்தவருமான திரு. ராஜ்மீரான் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடுகிறார்: காமராசர் அவர் சர்ந்த நாடார் சமூகத்திற்கு அவர் பதவியில் இருந்த கால கட்டத்தில் அதிகமாக உதவி செய்தார் என்று ஒரு கருத்து நிலவுகிறதே? (இது நிருபரின் கேள்வி) “அது உண்மையே கிடையாது, கமராசர் அனைத்து மக்களையும் ஒன்று போல் தான் நேசித்தார். ஒரு வேளை, காமராசர் எனக்கு சொந்தக்காரர் என்று கூறி சிலர் லாபம் கண்டிருக்கக் கூடும். காமராசர் தனது சமூகம், தனது குடும்பம், என்று உதவி செய்த நிகழ்வுகள் ஒன்று கூட கிடையாது” “… அதே நேரம் அவர் அதிகம் நம்பியது பிராமணர்களையே! காரணம், அன்று அவரிடம் நம்பிக்கையாக இருந்தவர்கள் அவர்களே. பிராமணர்கள் அவருக்கு அப்பழுக்கற்ற உதவிகளைச் செய்தனர். அதுவும் மறுக்க முடியாத உண்மை”. சக்திய மூர்த்தி என்ற பிராணனின் வழிக்காட்டலில் காமராசர் ஆட்சி செய்தார் என்பது உலகறிந்த உண்மை.

நாடார் சமூகம் கீழ் நிலையில் இருந்து அவரால் தான் மேல் நிலைக்கு வந்தது என்றும் ஒரு கருத்து உண்டுமே? “அதுவும் பொய். நாடார் சமூக மக்கள் உழைப்பு, உழைப்பு என்று உழைத்து முன்னேறிய சமூகம். அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள். காமராசரும் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான். காமராசர் முதல்வராக இருந்த போது அந்த சமூகம் அதிக வளர்ச்சி கண்டிருக்கலாம். அதற்கு காமராசர் உதவினார் என்பதில் இம்மி அளவுக்குக் கூட உண்மையில்லை.”

(திரு. ராஜ் மீரான் அவர்களை பேட்டி கண்டவர் கல்லை அன்சாரி என்பவர். இவர்கள் இருவரும் இசுலாமியர்கள். பேட்டி வெளியான பத்திரிகை “குமரிக்கடல்” – 2007 பிப்பரவரி மாதம், ஆசிரியர் – திரு. வு. பீட்டர் தாஸ், இவர் குமரி மாவட்ட மீனவச்சமுதாயத்தைச் சார்ந்தவர். இந்த திரு. ராஜ் மீரான் நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் இன்னும் வாழ்ந்து வருகின்ற 75-வயதான பக்கவாத நோயாளியாவார்.)

நாஞ்சில் நாட்டு பிள்ளையவாள் கூட காமராசரிடமிருந்து பேருதவி பெற்றுள்ளார் என்ற விவரத்தை அரு. சங்கர் நமக்குத் தருகிறார். முறைதவறிய உதவி என்று இதைக் கூறலாம். உதவி பெற்ற ஜுவானந்தம் அப்போது ஒரு காங்கிரஸ்காரர்.

“தாம்பரத்தில் ஒரு பள்ளித் திறப்பு விழாவிக்குச் சென்ற காமராஜர் அப்போது அங்கு வசித்த ஜுவாவையும் அழைத்துச் செல்லலாம் என நினைத்து அவரில்லம் சென்ற போது ஜுவா வாழ்ந்த நிலை கண்டு அதிர்ந்து போனார். உடுத்த மாற்றுடை கூட இல்லாத நிலையில் துவைத்த ஆடையை உலர்த்திக் கொண்டிருந்தார் ஜுவா.”
“அவருடைய இல்லற ஓடத்தை ஓரளவேனும் இன்பம் ஏந்திச் செல்லும் வகையில் ஜுவாவின் துணைவiயார் திருமதி. பத்மாவதி அம்மையாருக்;கு ஓர் அரசுப்பணி தந்து ஆதரித்தார் காமராஜர்” (அரு.சங்கர் – பெருந்தலைவர் காமராசர்) இத்தகைய உதவியை காமராசர் ஒரு நாடாருக்குச் செய்தது இல்லை. குறிப்பாக அவரது தங்கை மகனுக்குக் கூட செய்வதற்கு மறுத்தவர்தான் அவர் (ம.பொ. சிவஞானகிராமணியார் – எனது போராட்டம்)

இச்சூழ்நிலையில், 1938-ல் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திரு. இராசகோபாலாச்சாரியார் (ராஜாஜி) மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை அளித்தார். இதனை வரவேற்று காங்கிரஸ் அரசுக்கு நன்றி தெரிவிக்க நாடார் மகாஜன சங்கம் தவறிவிட்டது. இதனால் வெறுப்புற்ற தேசீயவாதிகளான சில நாடார் பிரமுகர்கள் அச்சங்கத்திலிருந்து வெளியேறி, “தேசீய நாடார் சங்கம்” என்ற தனி அமைப்பை நிறுவி 1938-ல் மதுரையில் தேசீய நாடார் மாநாட்டை நடாத்தினர். “நாடார் சமூகத்தின் தேசீய எழுச்சிக்கு இம்மாநாடு எடுத்துக்காட்டாக விளங்கியது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராக இருந்த திரு.கு. காமராசர், மாநாட்டு நிர்வாகிகள் அழைத்திருந்தும் அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். வியப்பென்னவென்றால் மாநாடு நடைபெற்ற நாளன்று அவர் மதுரையில் இருந்தும், மாநாடு நடந்த பக்கம்கூட அவர் தலைகாட்டாததாகும்.” (அதே புத்தகம்) ஆனால் திரு. நேசமணியவர்கள் இரண்டு நாடார் மகாஜன சங்க மாநாடுகளில் தலைமை தாங்கியுள்ளார் என்பது வியப்பளிப்பதாக உள்ளது. இதனால் நேசமணி நாடார் சமுதாயத்தைப் பெரிதும் மதித்தார் என்பது வெளிப்படை.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பெருந்தலைவர் நாடார் சமூகம் மற்றும் நாடார் மக்களிடத்தில் தனிப்பட்ட பற்றுதல் ஏதும் வைத்துக் கொண்டவர் அல்ல என்பதை உணர்த்தவேயாகும். இவர் சென்னை மாநில அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த அதே வேளையில் ம.பொ.சி. சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்தார். கிராமணியாரும் நாடார் சமூகத்தில் ஒரு கிளைப் பிரிவான “கிராமணி” சமுதாயத்தைச் சார்ந்தவர். மேடைப் பேச்சிலும், எழுத்துப் பணியிலும் காமராசரை விட கிராமணியார் சிறப்பான நிலையில் இருந்தார். ஒரு வேளை கிராமணியர் தனது இடத்தைப்பிடித்து விடுவாரோ என்ற அச்சத்தில் கிராமணியாரை காங்கிரஸ் அமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்கு பெரும் முயற்சியை காமராசர் எடுத்துக் கொண்டதன் பயனாக 08.08.1954 அன்று ம.பொ.சி. காங்கிரசிலிருந்து வெளியேறினார். “நானும் என்னுடைய நண்பர்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து கொண்டே கழகத்தை நடத்துவதால், உங்களுக்கோ, காங்கிரசுக்கோ என்ன நஷ்டம்” என்று ம.பொ.சி. கேட்க, “….. தமிழரசுக் கழகத்தின் பலத்தைக் கொண்டு, நீங்கள் காங்கிரசை கைப்பற்றிவிடலாமல்லவா, என்று திரு. காமராசர் சட்டென பதில் கூறினார்.” (எனது போராட்டம் – ம.பொ.சி)

தனது பதவி ம.பொ.சி. யால் பறி போய் விடுமோ என்ற அச்சத்தை மனதில் கொண்டே அவரை வெளியேற்றினார் என்பது இதனால் உறுதி. பதவி ஆசை காமராசரையும் விட்டு வைக்க வில்லை. ம.பொ.சி.யின் இழப்பால் காங்கிரஸ் தனது பிரச்சார பீரங்கிகளை ஒட்டு மொத்தமாக இழந்தது. அதன் தாக்கம் பின்னாட்களில் காங்கிரஸ், தி.மு.க. விடம் தமிழ்நாட்டை இழப்பதற்கு ஏதுவாகி விட்டது.

“ஆயினும், கழகத்தார் காங்கிரசிலிருந்து வெளியேறியதால் வலிமை மிக்க ஒரு பிரச்சார யந்திரத்தை தமழ்நாடு காங்கிரஸ் இழந்து விட்டது என்பதை மட்டும் இங்கு அழுத்தம் திருத்தமாக சொல்ல விரும்புகின்றேன், திறன்மிக்க பேச்சாளர்களாகவும், புகழ்மிக்க நடிகர்களாகவும் இருந்த பலருடைய சேவையை தமிழ்நாடு காங்சிரஸ் கட்சி இழந்தது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் பிரச்சாரயந்திரத்தின் தாக்குதலை சமாளிக்கும் திறனை இழந்து விட்டது.” (அதே நூல்)

தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக திரு. காமராசர் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக பிற்காலத்தில், தமிழ்நாட்டை தி.மு.க.வினரிடம் இழக்க நேர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இதுவே உண்மை. குhமராசரின் இந்த மதியீனத்தால் தமிழகம் வடுகர்கள் ஆட்சிக்கு வந்தது.

இதைப்போன்ற அணுகுமுறையே பெருந்தலைவர், மார்ஷல் நேசமணியிடமும் கடைபிடித்தார். 01.11.1956 – அன்று குமரி மண் தாய்த்தமிழகத்துடன் இணைந்தது. தேர்தல் நிச்சயிக்கப்பட்டுவிட்ட நிலையில், குமரித்தந்தை நேசமணி பாராளுமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடுவதற்கு எண்ணியிருந்தார். ஆனால் இங்கே ஒரு ‘மாயமான’ விளையாடிற்று, ப. தாணுலிங்க நாடார் களத்தில் இறங்கி சகுனி விiளாட்டு ஆடிக் கொண்டிருந்தார். எவ்வாறேனும் திரு. நேசமணியை சட்டமன்றத்தில் நிறுத்திவிட்டு, தான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே அந்த மாயத் திட்டம். இதைக் குறித்து திரு. அப்துல் ரசாக் எழுதுகிறார்: “இவர் தானே இப்போதெல்லாம் கமihஜுக்கும் நேசமணிக்கும் இடையே நம்பிக்கைத் தூதராக போய் வந்து கொண்டிருக்கிறார். காமராஜர் என்ன நினைக்கிறார் என்பதை நேசமணிக்கும், நேசமணி என்ன நினைக்கிறார் என்பதை காமராஜருக்கும் எடுத்தியம்பி இருவருடைய நம்பிக்கையையும் பெற்றிருந்தார். வசதியைப் பொறுத்தும் சந்தர்ப்பத்தைப் பொறுத்தும் இருவருமே இவர் பேச்சை நம்பினார்கள்.” (நேசமணி ஒரு சரித்திரப் திருப்பம்) – அப்படி என்ன தூது சொன்னார்? “….அதைப் பயன்படுத்தி நேசமணியிடம், காமராஜர் அவர்களிடத்தில் செயல்படுவதற்கு இவரை விரும்புகிறார் என்றும், அதனால் இவர் அசம்பிளிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும், ஒரு கற்பனைச் சித்திரத்தைக் கட்டி எழுப்பி விட்டார்.” (அதே புத்தகம்)

எப்படி இந்த கற்பனையை நேசமணி ஏற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. தான் தமிழ்நாட்டு மந்திரி சபையில் இணைந்து விட்டால், கன்னாயாகுமரி மாவட்டத்திற்கு பல நன்மை தரும் ஆக்கப் பணிகளைச் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று திரு. நேசமணி எண்ணியிருப்பார் போலும். “முதலில் மறுத்த நேசமணியும் அதற்கு இசைந்து விட்டார்.” (அதே புத்தகம்)
எதிர்பார்த்தபடி கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எதிர்ப்பின்றி ஏகமனதாக திரு. நேசமணி தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக நுழைந்தார். இதனால் ப. தாணுலிங்கம் நாடார் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்வு பெற்று டெல்லி சென்றார். ஆனால் அவர் கூற்றுக்கு எதிர் மறையாக காமராஜர் செயல்பட்டார். திரு. நேசமணியை அவர் கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, அரசியலில் கத்துக்குட்டியாக நுழைந்து, குளச்சல் தொகுதியிலிருந்து சட்டமன்றம் சென்ற திருமதி, லூர்தம்மாள் சைமனை காமராசர் தனது மந்திரி சபையில் அமைச்சராக்கி, நேசமணியின் முகத்தில் கரியைப் பூசினார். திரு. நேசமணிக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லையென்றாலும் பரவாயில்லை. திருமதி. லூர்தாம்மாளுக்கு அப்பதவியை அளித்தது குமரி வாழ் நாடார் மக்களை ஒட்டு மொத்தமாக காமராசர் இழிவுபடுத்தி விட்டதை யாராலும் சீரணித்துக் கொள்ள இயலவில்லை.

இதற்கும் காரணமுண்டு, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் திரு. நேசமணியின் தலைமையின் தலைமையில் இணைப்புப் போராட்டம் நடத்துகின்ற வேளையில் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, மலையாளிகளுடன் இணைக்கமாக நடந்து விடும்படி காமராசர் பலமுறை யோசனைக் கூறினார். ஆனால் இந்த யோசனையை நேசமணி ஏற்றுக்கொள்ளவில்லை. நேசமணி ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை சிந்திப்பதற்கு காமராஜர் தவறிவிட்டார். இந்த போராட்டம் தமிழ் மண்மீட்கும் போராட்டமோ அல்லது தமிழ் நாட்டின் எல்லை விரிவாக்கம் போராட்டமோ அல்ல என்பதை காமராசர் எண்ணிப்பார்க்க தவறிவிட்டார். சுமார் 200 ஆண்டு காலமாக நாடார் சமுதாய மக்கள் மலையாளி நாயர்களிடமிருந்தும், தமிழ் வெள்ளாளர்களிடமிருந்தும் எதிர் கொண்டுள்ள அடக்கு முறைகளுக்கு எதிராக விடுதலை வேண்டி நடத்தப்படுகின்ற இறுதிப் போராட்டம் என்பதை வரலாற்று அடிப்படையில் சிந்திப்பதற்கு காமராசர் தவறிவிட்டார். இந்த நீண்ட வரலாறு தெரியாத நிலையில் தான் காமராசர் திரு. நேசமணியை தனது பகைவனாக எண்ணிச் செயல்பட்டார் என்பது உண்மை. இருப்;பினும் தொடக்கக் காலங்களில் திரு. நேசமணி காமராசரின் உதவியை நாடுவதற்குத் தவறவில்லை. இது குறித்து திரு. நேசமணி கூறும்போது:

தென் திருவிதாங்கூரில் அன்று நிலவி வந்த அசாதாரண நிலையை நேரில் பார்த்து அறிந்து கொண்ட நிலையிலும், தென் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளைக் கொண்டு தமிழ் வருவாய் கோட்டம் ஒன்றை அமைத்து, அத்துடனே திருப்தியடைந்து, திருவிதாங்கூருடனே தொடர வேண்டியதுதானே என்று சொன்னாரே தவிர, அப்பகுதிகள் தாய் தமிழகத்துடன் வந்திணையட்டும் என்று கூறுவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. மலையாளிகளுடன் இணக்கமாக வாழ்வதற்கு முடியாது என்பதால் தானே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது என்ற உண்மையை அறிந்திருந்தும், அறியாதவர் போன்று பாவனை செய்து கொண்டார் என்றால் குமரி வாழ் நாடார் சமூக மக்கள் மேல் எந்த அளவுக்கு இவர் பரிவு வைத்திருந்தார் என்பது புலனாகிறது. எனவே திருவிதாங்கூரில் தமிழ் மக்கள் குறிப்பாக நாடார்கள் பெருவாரியாக வாழுகின்ற தமிழ் பிரதேசசங்களை தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்வதற்குக்கூட பெருந்தலைவர் தயாராக இல்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

அண்ணாத்துரை கூட இவரது இத்தகைய மனப்பாங்கைக் குறித்து இவ்வாறு கூறினார் : “ ……. எனவே நேருவாகப் பார்த்து, நியாத்;துக்குக் கட்டுப்பட்டு தமிழர்களின் உரிமைகளை தந்;தால் உண்டே தவிர, தம்பி! காமராசர் தமது திறமையினால் தமிழரின் உரிமையைப் பெற்று தருவார் என்று என்னால் துளியும் நம்ப முடியவில்லை. கேட்பார், புள்ளிவிபரம் தரப்படும். அதைத் தபாலில் அனுப்புவார். டில்லி இணங்க மறுத்தால், சரி போனால் போகட்டும், தேவிகுளம் இருந்தால் என்ன? அங்கு இருந்தால் என்ன? என்று கூறி விடுவாரேத் தவிர, தமிழர் உரிமை, தமிழகம் இவை பற்றி துளியும் அக்கறை காட்டமாட்டார். நாம் அவரை பச்சைத் தமிழர் என்று பாராட்டுகிறோம். அவர் மொழி, இனம், நாட்டு உணர்ச்சிகளுக்குத் தமது உள்ளத்தில் இடமளித்து பழக்கப்பட்டவரே அல்ல.” (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் – பாகம் – 1, கடிதம் 25, 6-11-1955 as quoted by, சங்கர், பெருந்தலைவர் காமராசர்)

எனவே தமிழ், தமிழ் இனம் (நாடார்கள் உட்பட) போன்ற உணர்ச்சிகள் இவரிடம் காண்பது அரிது, அப்படியிருந்தால் நாடார் சமுதாயம் அன்னாராது ஆட்சி காலத்தில் இமயமலையளவில் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு உரிய பங்கு இவரது ஆட்சி காலத்தில் கூடக் கிடைக்கவில்லை.

“இந்த நிலையில் திருவிதாங்கூரில் 1954 ஜனவரி – பிப்பரவரி மாங்களில் பொதுத் தேர்தல் வந்தது. இடது சாரிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், ரெவலூஷனரி சோஷியலிஸ்டுகள், கேரள சோஷியலிஸ்டுகள், பிரஜா சோஷியலிஸ்டுகள் போன்றோர் கூட்டணி அமைத்து காங்கிரசை எதிர்த்தனர். எனவே இவர்கள் தகுந்த முறையில் எதிர் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களான திரு. லால்பகதூர் சாஸ்திரியும், திரு. மல்லைய்யாவும், தி.த.நா. காங்கிரஸ் பிரதிநிதிகளை கன்னியாகுமரியில் சந்தித்து தே.த.நா. காங்கிரசின் கோரிக்கைகளில் ஒன்றான, திருவிதாங்கூர் தமிழ் பிரதேசங்களை சென்னை தமிழ்நாடு காங்கிரசின் வரம்பிற்குள் கொண்டு வருவதைக் குறித்துத் தேர்தலுக்குப் பிறகு சாதகமாக தீர்வு காணலாம் என்றும், அதற்கிடையில், திருவிதாங்கூர் தமிழ்த்தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தும் பொறுப்பை த.நா. காங்கிரஸ் தலைவர் காமராஜரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். இந்த வேண்டுகோளை நேசமணியின் தலைமையிலான தி.த.காங்கிரசார் ஏற்கவில்லை. இதனால் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.”

“திருவிதாங்கூர் ஸ்டேட் காங்கிரஸ் (எ.ஜே. ஜாண் தலைமையில்) தனது வேட்பாளர்களை (14 பேர்) தி.த.நா. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக தமிழ் பிரதேசங்களில் களமிறக்கியது. இவர்களுக்கு ஆதரவு தேடி காமராசர் திருவிதாங்கூர் தமிழ்ப் பிரதேசங்களில் பல நாள் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். “அவரைத் தொடர்ந்து சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் பேச்சாளப் பீரங்கிகள், பெரிய தோக்குகள், சிறிய தோக்குகள், கைத் தோக்குகள் என பல தரப்பட்ட வெடி வேட்டுகள் தங்கள் கோப்புகளோடும், பிரச்சார வண்டிகளோடும் இங்கே படையெடுத்து வந்தனர். எதற்காக? இங்குள்ள தமிழ்ப் பிரதேசங்கள் தாய் தமிழகத்தோடு இணைய வேண்டுமென்று ஆறு தலைமுறைகளுக்கு மேலாக ஆர்பரித்து வந்திருக்கும் தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தை திருவிதாங்கூர்- கொச்சி காங்கிரஸ் கட்சியின் குதிகாலில் கட்டி விடுவதற்காக! பரந்த தமிழகத்தின் தானைத் தலைவராக தன்னைப்பாவித்துக் கொண்ட காமராஜரோ நேசமணியைப் பழித்துக் கூறி குறைத்துக் கூறும் படலத்துக்கு துவக்க உரையாற்றினார்.

வடிவீஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில், “நேசமணி, எந்த யுத்தக் களத்திற்கு போனார்? மார்ஷல் பட்டம் அவருக்கு எவன் கொடுத்தான்? விலைக்கு வாங்குவதற்கு அது என்ன கடைச்சரக்கா?” என்றெல்லாம் இகழ்ந்து பேசினார். மதராஸ் கார்ப்பரேசன் வக்கீல் வு. செங்கல்வராயன், நேசமணிக்குக் குடியரசுச் சட்டம் மூன்றாவது ஆர்ட்டிக்கிள் சம்பந்தமாக பாடம் சொல்லி வைக்க முன் வந்தார். அவர் வளர்ப்பு மகள் அனந்தநாயகி அம்மாள் “தம்பி நேசமணி-க்கு தங்கள் எதிர்ப்பை தாள முடியுமா என்று கேட்டு வைத்தார். (அந்த அம்மாளுக்கு நேசமணியின் மூத்த மகளின் வயது கூட இருக்காதது).” (எ.எ. ரசாக்- நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்)

காமராசரின் இந்தப் பிரச்சார வேளையில், தி.த.நா. காங்கிரசுக்கு எதிராக சில இந்து நாடார்களை அவர் தூண்டியதாகவும் தெரிகிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியின் தலைமை குரு திரு. பாலகிருஷ்ண நாடாரை காமராசர் தன்வயப்படுத்தி, நேசமணிக்கு எதிராக ஒரு நாடார் அமைப்பை உருவாக்கியிருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

திரு. காமராசர், “நேசமணிக்கு எவன் மார்ஷல் பட்டம் கொடுத்தான்” என்ற கேள்வியை அன்னாரது பிரச்சார வேளையில் எங்கும் கேட்டு வந்தார். அதற்கான விடையை காமராஜ் பக்தனான திரு அரு. சங்கரே தருகிறார்: “பழைய திருவிதாங்கூர்- கொச்சி மாநிலத்தின் ஓர் அங்கமாக வரலாற்றுப் புரட்டால் ஆக்கப்பட்டிருந்த இம்மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க மார்ஷல் நேசமணியும் அவரது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கொடுத்த விலை, மதிப்பு போட்டுப்பார்க்கக்கூடிய ஒன்றல்ல. அதைக் கேரள தலைவர்கள் மேற்கொண்ட கொடுமையான அடக்குமுறைகளையும், சிறைத்தண்டனைகளையும் போராட்டங்கள் பலவற்றின் மூலம் தோல்வியுறச் செய்தவர் நேசமணி அவர்கள். அதன் காரணமாகவே “மார்ஷல்” என்ற பட்டம் சூட்டப்பட்டு மக்களால் அழைக்கப்பட்டார்” (பெருந்தலைவர் காமராஜர்- அரு. சங்கர்)

“காமராசரின் தரம் கெட்ட வசை மொழிக்கு பதில் தராமல், மக்கள் பார்த்துக் கொள்வர் எனக்கூறி நேசமணி ஒதுங்கிவிட்டார். அதற்கு மக்கள் சரியான பதிலடியை திரு. காமராஜ் அவர்களுக்குத் தந்து திரு. நேசமணி அவர்கள் தான் “மார்ஷல்” என்று மீண்டும் நிருபித்தனர். திரு-கொச்சி தமிழ் பிரதேசங்கிளல் திரு-கொச்சி தேசீய காங்கிரசால் போட்டியிட வைத்த 14 – வேட்பாளர் அனைவரும் வைப்புத் தொகையை (னுநிழளவை) இழந்தனர். ஆனால். தி.த.நா.கா.வின. பலம் 9-ல் இருந்து 12 அக உயர்ந்தது. தவிரவும் முன் சட்ட மன்றத்தில் 44 பேரைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பிறகு 117 – மொத்தம் அங்கத்தினர்களுக்கு 45 –ஐ மட்டும் பிடித்தது. ஆதனால் காங்கிரசால் அமைச்சரவை அமைக்க முடியாத நிலையில்?, மீண்டும் பட்டம் தாணுபிள்ளையை (பி.எஸ்.பி) அமைச்சரவை அமைப்பதற்கு வாய்ப்பை காங்கிரஸ்காரர்கள் அளித்தனர். இவ்வாறு திரு. காமராசரை தென் திருவிதாங்கூர் நாடார் மக்கள் புறக்கணித்தனர்” (அதே புத்தகம்)

பட்டம் தாணுபிள்ளை இரண்டாம் முறையாக முதலமைச்சர் ஆனதும் அன்னாரது நாடார் விரோத அடக்கு முறைகளை மீண்டும் தொடங்கினார். இதனை எதிர்த்து நாடார் சமுதாயம் 11.8.1954 – அன்று விடுதலை நாள் கடைபிடித்தது. இதில் கம்யூனிஸ்ட்களின் குறிப்பாக ஜுவாவின் கட்சி ஆட்கள் தொடுவட்டியில் புதுக்கடையிலும் வன்முறையில் இறங்கினர். அதன் காரணமாக தொடுவட்டியிலும் புதுக்கடையிலும் மலையாளி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியானார்கள். தவிரவும் போலீஸ் படையினரின் அத்து மீறல்களும், அட்டூழியங்களும் தாங்கொணா அளவிற்கு விளவங்கோடு மற்றும் கல்குளம் வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக குறிப்பாக நாடார்களுக்கு எதிராக அவிழ்த்துவிடப்பட்டன. பலர் காட்டு பகுதிகளுக்கும், அனேகர் எல்லையைக் கடந்து தமிழ்நாட்டிற்கும் சென்று தஞ்சமடைந்தனர்.

இந்த நிலையில் ம.பொ.சி. நாகர்கோவிலில் வந்து (13.08.1954) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த திரு. நேசமணியும் அவரது வலதுகரமான திரு. எ. அப்துல் ரசாக்கையும் கண்டு பேசி நிலைமையை முற்றிலும் அறிந்தவராகச் சென்னை சென்று எழுதுகிறார்: “நெல்லையில் ஒரு நாள் தங்கி விட்டு சென்;னை திரும்பிய பின்னர், முதல்வர் காமராசரைச் சந்தித்து, தென் திருவிதாங்கூர் நிலைமையை விவரித்தேன். பிதமருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டம் தாணுவின் ஆட்சி நடத்தும் அடக்கு முறைக் கொடுமைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். தெற்கெல்லை கிளர்ச்சி காரணமாகத்தான் இவ்வளவும் நேர்ந்ததென்றும் அது தேவையற்ற கிளர்ச்சியென்றும் அவர் கூறினார். “(எனது போராட்டம் -ம.பொ.சி.)

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் பெரும்பாலோர் நாடார் சமுதாய மக்கள். முலையாளி போலீசாரின் வன்கொடுமைகளுக்கும், வெறியாட்டங்களுக்கும் உள்ளாக்கப்பட்;டவர்கள் அனைவரும் நாடார்கள். நாடார்களை நொறுக்குகிறார்களே என்ற ஆதங்கத்தால் அதற்கு உடனடி பரிகாரம் தேட வேண்டும் என்று திரு. காமராசரிடம் எடுத்துக் கூறியவரும் ஒரு நாடாரே ஆவார். ஆதரவு கேட்கப்பட்டதும் ஒரு நாடாரிடத்தில் தான். அதற்கு அந்த நாடார் அளித்த பதில் வேதனை தருவதாக இலலையா? காமராசரின் இனப்பற்றுஇவ்வளவு தான் என்பது இதனால் தெரிந்து கொண்டோம்.

ஒரு வேளை சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி அவர்களோ, அண்ணாவோ, அவ்வமையம் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்திருப்பார்களேயானால் பட்டம் தாணுபிள்ளையின் நிலைமை இக்கட்டானதாக இருந்திருக்கும். திருவிதாங்கூர் தமிழர்களுக்கு பக்க பலமாக நின்று அவர்கள் செயல்பட்டிருப்பர். ஆனால் காமராசர் அன்று முதலமைச்சராக இருந்தது திருவிதாங்கூர் தமிழர்களின் துரதிர்ஷடமே.

காமராசர் நமக்காக மனம் உருகவில்லை. அதைக் குறித்து ம.பொ.சி. கூறுகிறார்: “தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பழமொழி. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ்க்கு சதை கிடையாது. அதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்களுக்கிழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக அது ஆடவேயில்லை.” “தமிழகத்தின் முதல்வர் – தமிழகத்தின் பெருந்தலைவர் – என்ற முறையில் திரு. காமராசர் தென் திருவிதாங்கூர் தமிழர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு அனுதாப மொழி கூடக் கூறவில்லை” (அதே புத்தகம்)

இவரால் எந்த வித்தில் நமக்குப் பெருமை? நாம் துயரப்பட்டிருக்கும்வேளை நமக்கு ஆறுதலுக்காவது ஒரு வார்த்தை கூறுவதற்கு மனமில்லாதவரை என்னவென்பது? இருதயமில்லாதவரென்று சொல்லலாமா? அல்லது கல் நெஞ்சமென்று கூறலாமா? சேர நாட்டு நாடாருக்கு எதிரான பாண்டிய நாட்டு நாடார் என்று கூறுவதே சாலப்பொருத்தம். ஆனால் குமரி மாவட்ட நாடார்கள் காமராசரை துதி பாடித் திரிகிறார்கள்.

“பிறர் வளர்ச்சியைத் தடுப்பதால்தான் தனது வளர்ச்சி இருக்கிறதென்பது அவரது (காமாராஜரது) சித்தாந்தம்” என்றும் ம.பொ.சி. கூறுகிறார். ஒரு வேளை நேசமணி தன்னை விட வளர்ந்து விடுவாரோ என்றொரு அச்சம் காமராசரின் மனதில் இருந்திருக்கலாம். அதனால்தான் என்னவோ, “திரு. காமராசர் தெற்கெல்லை கிளர்ச்சி நடந்தபோது, அதற்கு எதிராக எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்தவர். பச்சையாகச் சொல்வதானால், கேரள ஆதிக்கத்திற்கு தமிழர் அடிமைப்பட்டிருக்கும் நிலை நீடிக்கச் செய்ய அவர் அரும்பாடுபட்டவர்” என்று ம.பொ.சி. கூறுகிறார். (அதே நூல்)

இந்த அசாதாரண நிலையில் குழம்பியிருந்த நேசமணி யாரையும் நம்பிப்பயனில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜி அவர்களிடம் அலோசனை கலரும் படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவர் காமராசை நம்பாமல், இராஜாஜியை நம்பினார். அவரை சந்தித்த ரசாக: “இது விஷயமாக நான் முதலில்சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் (ளுரிசநஅந ஊழரசவ) ஒன்று தான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்”. (எ.எ. ரசாக. – நேசமணி ஒரு சரித்திர திருப்பம்)

திரு. காமராசரால் தீர்வுகாண இயலாத நிலையில், ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: “திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார் (அதே புத்தகம்)

இந்த ஆலோசனையை மார்ஷல் நேசமணியின் அங்கீகாரத்திற்கு என எ. ரசாக் சுமந்து வந்தார். தி.த.நா.கா. தலைவர் பி. ராமசாமி பிள்ளை, பொதுச் செயலாளர் ஆர். பொன்னப்ப நாடார், மற்றும் நீதிமன்ற வழக்குகளை முன்னின்று கவனித்து வந்த பக்குருதீன் ஆதத்தையும் வரச் செய்து ஆலேசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பி. ராமசாமிப் பிள்ளையும், பக்குருதீன் ஆதமும் உடன்படவில்லை. அவர் எடுத்துரைத்த வாதம் விசித்திரமாக உள்ளது. “- உச்ச நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் தொடரப்பட்டால் பி.எஸ்.பி. சர்க்கார் (பட்;டம் தாணுபிள்ளையின் அரசு) மேலும் ஆத்திரப்பட்டு மேற்கொண்டு எந்த சமாதான முயற்சியிலும் ஈடுபடாது என்று அச்சம் தெரிவித்தார்.” (அதே புத்தகம்) ஆனால் திரு. நேசமணிக்கு, அரசு ஒரு கண்ணியமான உடன்பாட்டுக்கு வரும் என்பதில் நம்பிக்கை இல்லை. உச்சநீதி மன்றத்தில் தாவாக்களை எடுத்துச் செல்லாம் என்றும், தேவைப்பட்டால். அதை பிறகு பின் வலிக்கலாம் என்றும் ஆலோசனை சொன்னார், தலைவரின் இந்த ஆலோசனையை பிறகு அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வழக்கறிஞர் தைக்காடு திரு. சுப்பமைணிய ஐயரைத் தொடர்பு கொண்டு, இராஜாஜியின் அறிவுரையையும் அதன் மீது தங்களது முடிவும் அறிவிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைச் சட்டம் 527 (C.R.P.C) –ன் அடிபபடையில் திரு – கொச்சியில் நடந்து வருகின்ற பதினொரு வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கான மனுக்களைத் தயார் செய்யும் பொறுப்பை திரு. நேசமணியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் மேல் முறையீடு விண்ணப்பங்கள் தயார் செய்வதில் நேசமணி ஈடுபட்டிருந்ததைக் குறித்து திரு. யு. அப்துல் ரசாக்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*