சிறுத்தை புலி வாயில் இருந்து 4 வயது மகனை காப்பாற்றிய வீரத்தாய்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாசிக்கில், சிறுத்தைப்புலி வாயில் சிக்கிய தனது 4 வயது மகனை வீரத்துடன் செயல்பட்டு தாய் மீட்டார்.

கணவரை இழந்த பெண்
நாசிக், வடாங்களி பகுதியில் உள்ள சோம்டானே, கீதேவஸ்தி பகுதியை சேர்ந்தவர் அனிதா(வயது30). இவரது கணவர் நவ்நாத் ஒரு மாதத்திற்கு முன் இதயநோய் காரணமாக இறந்துவிட்டார். அதன்பிறகு அனிதா தனது 4 வயது மகன் வைபவ் உடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அனிதா கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கூலிவேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மகன் வைபவை அழைத்துக்கொண்டு அனிதா அங்குள்ள மக்காச்சோளம் வயலில் அறுவடைக்காக சென்றிருந்தார்.

சிறுத்தை கவ்வியது
மாலை அறுவடை செய்து கொண்டிருந்தபோது வயலின் ஓரத்தில் சிறுவன் வைபவ் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை புலி ஒன்று வைபவ் மீது பாய்ந்து அவனது கழுத்தை கவ்வி தூக்கிச்சென்றது.

சிறுத்தையின் வாயில் சிக்கிய அவன் கதறி துடித்தான். இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அனிதா அலறியபடி கையில் பெரிய தடியுடன் சிறுத்தைப்புலியை துரத்தினார். அவருடன் வேலை செய்து கொண்டிருந்த பெண்களும் விரட்டினர். இதனால் பயந்துபோன சிறுத்தைப்புலி வைபவை வயலில் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது.

மகனை மீட்ட வீரத்தாய்
சிறுத்தைப்புலி கவ்வியதில் கழுத்தில் ஆழமாக பல் பதிந்து பலத்த காயம் அடைந்த வைபவை அனிதா மற்றும் மற்ற பெண்கள் மீட்டு வடாங்களியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நாசிக் வடாங்களி கிராமத்து மக்கள் அனைவரும் கூட்டம், கூட்டமாக சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் வைபவை பார்த்தனர். மேலும் சிறுத்தைப்புலி வாயில் இருந்து மகனை காப்பாற்றிய அவனது வீரத்தாய் அனிதாவை அனைவரும் பாராட்டினார்கள்.

மேலும் தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ பகுதியில் விரைந்து வந்து சிறுத்தைப்புலியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*