காதல் விளையாட்டில் தம்பதிகள் கட்டாயம் இந்த உணவுகளை தவிருங்கள்…

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தம்பதிகள் சிலர் தங்களின் காதல் விளையாட்டுகளில் அதிக இன்பம் அடைய பல செயல்களை கையாள்வது உண்டு. ஆனால், அதில் சிலவன ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பண்புகள் கொண்டவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கியமாக இதுபோன்றவை பெண்களின் பிறப்புறுப்பில் தொற்று நோயை உண்டாக்கக் கூடியவை என்பதால் தம்பதியினர் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்….

ஸ்வீட் / சாஸ்:

ஜெல்லி, தேன், பீனட் பட்டர் போன்ற சுவையூட்டி உணவுகளை தம்பதிகள் காதல் விளையாட்டில் ஈடுபடும் போது பயன்படுத்த கூடாது என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது பெண்களின் பிறப்புறுப்பில் தாக்கம் உண்டாக்கலாம். முக்கியமாக பெண்ணுறுப்பில் ஈஸ்ட் போன்ற பாக்டீரியா தொற்று உண்டாக இனிப்பு உணவுகள் காரணியாக இருக்கின்றன.

பழங்கள், காய்கறிகள்:

பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் போது பெண்ணுறுப்பில் தொற்று எளிதாக உண்டாக வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிறியளவிலான காய்கறி, பழங்கள் ஆகியவை. நீங்கள் உங்கள் காதல் விளையாட்டில் பயன்படுத்தும் பொருட்களை என்னதான் சுத்தம் செய்திருந்தாலும் கூட இவ்வகை உணவுகளில் எளிதாக மீண்டும் பாக்டீரியா தொற்று ஒட்டிக்கொள்ளும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மகப்பேறு மருத்துவர் ஒருவர் ஒருசில தருணத்தில் கிரேப்ஸ் போன்ற பழங்கள் பயன்படுத்தி விபரீதம் ஆகி சிகிச்சைக்கு வந்தவர்களும் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மசாலா பொருட்கள்:

சில வினோதமான தம்பதிகள் இனிப்பு சுவை சார்ந்த மசாலா பொருட்களை பயன்படுத்துவதால் பிறப்புறுப்பில் எரிச்சல் அல்லது தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு செல்கின்றனர். எக்காரணம் கொண்டும் இவ்வகை உணவுகளை தம்பதிகள் தங்கள் காதல் விளையாட்டின் போது பயன்படுத்த வேண்டாம் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அலர்ஜி உண்டாக்கும் உணவுகள்:

ஒவ்வொரு தனி நபருக்கும் அவரது உடல் கூறு சார்ந்து ஏதேனும் உணவை சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு ஒவ்வாமை உண்டாகும். அவ்வகையான உணவுகளை தம்பதிகள் காதல் விளையாட்டின்போது பயன்படுத்த வேண்டாம். இவை கடுமையான சரும பிரச்சனைகளை உண்டாக்கும் என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எண்ணெய்:

தம்பதிகள் மத்தியில் வலியில்லாமல் தாம்பத்தியத்தில் ஈடுபட எண்ணெய் பயன்படுத்தும் முறை இருக்கலாம். ஆனால், பெண்ணுறுப்பில் எண்ணெய் பயன்படுத்தும் போது அதை முற்றிலுமாக நீக்க முடியாது. மேலும், இது பாக்டீரியாக்கள் எளிதாக அவர்கள் பிறப்புறுப்பில் அதிகரிக்க காரணியாக இருக்கின்றது. எனவே, தேவையற்ற எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம்.

ஆல்கஹால்:

பொதுவாக மேல்நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக காணப்படும் பழக்கத்தில் ஒன்று இது. தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்னர் சாம்பெயின் போன்ற மதுவை உடலில் வழியவிட்டு மகிழ்வதுண்டு. ஆனால், இதுபோன்ற மது வகைகள் பெண்ணுறுப்பில் படமால் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருக்கும் கெமிக்கல் பொருட்கள், பெண்ணுறுப்பில் எரிச்சல் உண்டாக காரணியாக அமையலாம்.

வெப்பம் அதிகமான உணவுகள்:

சிலவகை உணவுகள் சூட்டை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருக்கும். இவ்வகை உணவுப் பொருட்களை பயன்படுத்துவது, மென்மையான உட்சருமம் கொண்டுள்ள பெண்ணுறுப்பில் எதிர்மறை தாக்கங்கள் உண்டாக்கும்.

தாம்பத்தியத்தில் அதிக இன்பம் பெற தம்பதிகள் இவ்வகையான நடவடிக்கைகளை கையாள்கின்றனர். நோய் தொற்று உண்டாகதவண்ணம் செயற்படுவதில் தவறில்லை. தம்பதினர் சில சமயத்தில் நோய் தொற்று ஆனாலும் ஆரம்பத்தில் மருத்துவரை அணுகாமல், கடைசி கட்டத்தில் அணுகுவது தான் பெரும் தவறு.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*