இன்னும் 10 வருடங்களில் உலகிலுள்ள 10 மில்லியன் நாடற்றவர்களுக்கு விமோசனம்!:UNHCR

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகில் தற்போது 10 மில்லியன் நாடற்றவர்கள் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ள நிலையில் ஐ.நா இன் அகதிகளுக்கான பிரிவான UNHCR இன்னும் 10 வருடங்களுக்குள் இவர்களுக்கு விமோசனம் அளிக்கும் விதத்தில் நாடற்றவர்கள் என்று எவரும் இல்லாத நிலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளதுடன் இதற்கான பிரச்சாரத்தையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகில் தற்போது வளர்ந்து வரும் பிரச்சினையாகக் நாடற்றவர்களின் அவலம் கவனிக்கப் பட்டுள்ளது. உலகம் முழுதும் சுமார் 10 மில்லியன் பேர் தமக்குப் பிரஜாவுரிமையோ அல்லது கடவுச் சீட்டோ அற்றவர்களாக விளங்குகின்றனர். இவர்களுக்கு மருத்துவ வசதி, கல்வி மற்றும் வாக்களிப்பு போன்ற அரசியல் உரிமைகள் பரவலாக மறுக்கப் பட்டு வரும் நிலை இன்னமும் நீடித்து வருகின்றது. இந்நிலையில் இப்பிரச்சினை உலக அரசியல் தலைவர்களின் சிறு நடவடிக்கைகள் மற்றும் அரசியல் முடிவுகளால் தீர்க்கப் பட முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளதுடன் இந்த 10 மில்லியன் நாடற்ற மக்களும் தாம் அனுபவிக்கும் அவல நிலையைத் தமது வருங்கால சந்ததிகளுக்கும் கடத்தாமல் தடுப்பதும் மிக முக்கியமான தேவை என UNHCR தெரிவித்துள்ளது.

அதாவது அகதி முகாம்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் பிறக்கும் நாட்டின் குடியுரிமையோ அல்லது தாயகத்துக்குத் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்போ கிடைப்பதில்லை. இதை விட மியான்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம்கள் போன்ற பூர்வீக சிறுபான்மை இனத்தவர்களுக்கும் பல காரணங்களுக்காக குடியுரிமை மறுக்கப் பட்டு வருகின்றது. மேலும் தமிழர்கள் அதிகமான அளவில் நாடற்ற நிலையில் வாழும் இடமாக மலேசியா விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகம் முழுதும் சுமார் 27 நாடுகளில் பெண்கள் தமது குடியுரிமையைத் தமது குழந்தைகளுக்கு வழங்குவதற்கு அனுமதி மறுக்கப் படுவதாகவும் UNHCR தெரிவித்துள்ளது.

இதேவேளை உலகிலுள்ள சில நாடுகள் இப்பிரச்சினையைத் தீர்க்கப் போதுமான நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் UNHCR சுட்டிக் காட்டியுள்ளது. உதாரணமாக முன்னால் சோவியத் குடியரசின் அங்கத்துவ நாடாக இருந்த கிர்கிஸ்தான் கடந்த 5 வருடங்களில் 65 000 பூர்வீக ரஷ்யர்களுக்கு குடியுரிமை அளித்துள்ளதைக் கூற முடியும். இந்நிலையில் ஐ.நா சபை 1954 ஆம் ஆண்டு நாடற்றவர்களை தத்தெடுக்கும் சாசனத்தையும் 1961 இல் நாடற்றவர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் சாசனத்தையும் அமுல் படுத்தியிருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் இவ்விவகாரத்தில் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை என்று UNHCR தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*