மறுபடியும் முருங்கைக்காய் சமாச்சாரமா?

பிறப்பு : - இறப்பு :

இயக்குநர் – நடிகர் – திரைக்கதாசிரியர் பாக்கியராஜ் நடித்து வரும் புதிய படம் சில புதிய எதிர்பார்ப்புகளை + கிளுகிளுப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளது.

படத்தில் முந்தானை முடிச்சு சாயல் தென்படுகிறதோ என்றும் யோசிக்க வைக்கிறது பாக்கியராஜ் சம்பந்தப்பட்ட சில காட்சிகள்.

இந்தப் படத்தில் பாக்கியராஜ்தான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுவும் துணை முதல்வர் வேடத்தில். ஆனால் படத்தின் இயக்குநர் இவர் இல்லை.

அதேசமயம், இவரது இயக்க சாயல் கண்டிப்பாக படத்தில் இருக்கிறது என்பது ஸ்டில்களைப் பார்த்தாலே தெரிகிறது.

கடைசியாக பாக்கியராஜ் இயக்கியது சித்து +2. இது இவரது மகன் சாந்தனு நடித்த படம். படம் சரியாக போகவில்லை.

இந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தில் முழு நீள வேடத்தில் தலை காட்டுகிறார் பாக்கியராஜ். படத்தின் பெயர் துணை முதல்வர்.

படத்தை விவேகானந்தன் என்பவர் இயக்குகிறார். ஐஸ்வர்யா மேனன், ஜெயராம், மீனாட்சி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். டி.பி.கஜேந்திரன், மனோபாலா ஆகியோரும் படத்தில் உள்ளனர். பாக்கியராஜின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான ஜூனியர் பாலையாவுக்கும் முக்கிய வடம்.

படத்தில் ஸ்வாதி மேனன் முக்கிய வேடத்தில் வருகிறார். அதுவும் பாக்கியராஜுடன் சேர்ந்து கவர்ச்சியிலும் கலகலக்க வைத்துள்ளார்.

படத்தின் ஸ்டில்களில் நம்மைக் கவர்ந்தது நிறைய இருந்தாலும் பாக்கியராஜ், ஸ்வாதி மேனன் இணைந்து போட்டுள்ள பாடல் காட்சிதான் ரொம்பவே கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. முந்தானை முடிச்சு படத்தில் வந்த கண்ணத் தொறக்கனும் சாமி பாடல் சாயல் இதில் நிறையவே தெரிகிறது.

இதில் ஸ்வாதி மேனன் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட பாக்கியராஜுடன் பாடல் காட்சியில் டான்ஸ் போட்டுள்ளார். இந்தப் பாடல் எந்த சிச்சுவேஷனில் வருகிறது என்பதை பாக்கியராஜே சொன்னால்தான் உண்டு. மறுபடியும் முருங்கைக்காய் சமாச்சாரம் எதையாவது கையில் எடுத்திருக்கிறாரா பாக்கியராஜ் என்று தெரியவில்லை…!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit