எப்படி மறப்பேன்?…

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எம் தமிழினத்தை கூண்டோடு அழித்தான்
இந்த உலகமே வேடிக்கைப் பார்த்தது!
போரில்லாப்பகுதி என்று அறிவித்து விட்டு
போய் மக்கள் குவிந்ததும் குண்டுப் போட்டான்!
விடுதலை கேட்டது குற்றமெனக் கூறி
வீதியில் விட்டு சுட்டு மகிழ்ந்தான்!
குழந்தைகள் பெண்கள் முதியோர் என்று பாராமல்
கண்மூடிதனமாகக் கொலைகள் புரிந்தான்!
மருத்துவமனை பள்ளி விடுதி என்று பாராமல்
மனம் போனபடி கொன்று குதூகலித்தான்!
சரண் அடைபவர்களை சுடக் கூடாது என்று
சட்டம் சொல்கிறது சுட்டுக் குவித்தான்!
எட்டு நாட்டுப் படைகளின் உதவியுடன்
சொந்த நாட்டு மக்களை பலியிட்டுச் சிரித்தான்!
கொன்று குவித்த கொடூரன் இலங்கையில் இன்று
கோலாகலமாக சுதந்திரமாக வலம் வருகிறான்!
ஐ.நா.மன்றம் உள்ளிட அனைவரும் குற்றவாளிகள்
அநீதி இழைத்தவன் மீது நடவடிக்கை இல்லை!
மடிந்தது தமிழினம் என்ற காரணத்தால்
மனமில்லை தட்டிக் கேட்க யாருக்கும்!
தூக்குத்தண்டனைக்குகுரிய குற்றவாளியை
குறைந்தபட்சம் கைது கூட செய்யவில்லை!
எம் தமிழினம் அழித்தவனை எப்படி மறப்பேன்?
இனவெறி பிடித்த மிருகத்தை எப்படி மன்னிப்பேன்?
மறக்க முடியாத வடு நெஞ்சில் உள்ளது
மன்னிக்க முடியாத வெறி மனதில் உள்ளது!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*