
வெளியான 24 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் ரஜினியின் லிங்கா டீசரைப் பார்த்துள்ளனர். ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் காத்திருந்த லிங்கா படத்தின் முதல் டீசர் நேற்று முன்தினம் மாலை யுட்யூபில் வெளியானது. ஒரே நேரத்தில் பல லட்சம் ரசிகர்கள் இந்த டீசரைப் பார்க்க ஆரம்பித்ததால் யூட்யூப் தளமே திணறியது.
எத்தனைப் பேர் பார்த்தார்கள் என்ற views count-ஐ தற்காலிகமாக நிறுத்திவிட்டது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே சில லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருந்த நிலையில், யூட்பிலிருந்து அந்த வீடியேவை, தயாரிப்பாளரான ராக்லைன் என்டர்டெயின்மென்ட் நீக்கிவிட்டது.
டீசரின் கடைசியில் வரும் லிங்கா போஸ்டரை நீக்கிவிட்டு மீண்டும் யூட்யூபில் பதிவேற்றனர். இந்தப் புதிய லிங்க்தான் அதன் பிறகு பார்வையாளர்களுக்குக் கிடைத்தது. இந்த புதிய லிங்கில் மட்டும் லிங்கா டீசரை 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். கோச்சடையான் படத்தின் போஸ்டர் டீசரும் முதல் நாளில் ஒரு மில்லியனைத் தொட்டது நினைவிருக்கலாம்.