திரிஷா–ராணா காதல் முறிவுக்கு நான் காரணம் அல்ல – கன்னட நடிகை!

பிறப்பு : - இறப்பு :

திரிஷா–ராணா காதல் முறிவுக்கு நான் காரணம் அல்ல என்று கன்னட நடிகை ராகிணிதிவேதி மறுத்துள்ளார். திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் தீவிரமாக காதலித்தனர். பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வந்தார்கள். வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் ஒன்றாக போனார்கள். அருகருகே உட்கார்ந்து விழாக்களை ரசித்தார்கள். இரவு விருந்துகளிலும் ஜோடியாக கலந்து கொண்டனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இரு வீட்டு பெற்றோரும் இவர்கள் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திரிஷா, ராணா காதலில் தற்போது திடீர் முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்த காதல் முறிவுக்கு கன்னட நடிகை ராகிணி திவேதிதான் காரணம் என கிசுகிசுக்கள் பரவின. ராகிணி திவேதியுடன் ராணா சமீபகாலமாக நெருக்கமான உறவு வைத்து இருந்தார். திரிஷாவுக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பை ராணாவுக்கு வேண்டாத ஒருவர் திரிஷாவிடம் போட்டு கொடுத்து விட்டதாகவும் எனவே காதலை அவர் முறித்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதனை ராகிணிதிவேதி தற்போது மறுத்துள்ளார். அவர் கூறும்போது, திரிஷாவுக்கும் ராணாவுக்கும் இடையே உள்ள பிரச்சினை அவர்கள் சொந்த விஷயம். அதில் என்னை இணைத்து வதந்திகள் பரப்புவது வருத்தமாக இருக்கிறது. ராணாவுக்கும் எனக்கும் காதல் இல்லை. இதுபோன்ற வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. தயவுசெய்து இதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit