பாரிஸ் தாக்குதலுக்கு தொடர்புடைய நபர் தமிழகத்தில் கைது!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

police

தமிழகத்தில் கைதான நபருக்கும் பாரிஸ் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் தொடர்புள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் திருநெல்வேலி, கடையநல்லூரில் கைது செய்யப்பட்ட சுபஹானி ஹாஜா மொய்தீனிடம் நடத்திய விசாரணையில் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு துாதரக அதிகாரிகளுக்கு, என்.ஐ.ஏ.அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸ் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுபஹானியிடம் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பாரிசில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அப்டெலாமித் அபாவுட், சலா அப்தெஸ்லாம் உள்ளிட்டவர்களை சுபஹானி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஈராக்கில் சந்தித்து பயிற்சி பெற்றுள்ளார்.

இந்த சந்திப்பின் பிறகு, ஒரு சில மாதங்களில் பாரிஸ் தாக்குதலை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit