வெளிநாட்டவருடன் இணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Singala

நல்லாட்சியின் பாதுகாப்பு படைக்கு எதிராக சற்று முன்னர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நல்லாட்சி அரசின் பாதுகாப்பு படைக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பிய வண்ணம் தமது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த காலத்தில் இரத்த வெள்ளத்தை விரும்பும் ஒரு கொடூர ஆட்சி காணப்பட்டதைப் போன்றே, இந்த நல்லாட்சி அரசிலும் பொலிஸ் அடக்கு முறை செயற்பாடு காணப்படுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தினார்கள்.

பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை கண்டித்தும், சக மாணவர்களின் படுகொலைக்கு நீதிவேண்டியும் நல்லாட்சி பாதுகாப்பு படைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, சாணக்க, ஹன்டனி போன்ற சம்பவங்களையும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஞாபகப்படுத்தினார்கள்.

மேலும், இந்த பாரிய ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், வெளிநாட்டவர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit